சென்னை ஸ்போர்ட்ஸ் விருது விழாவில் டீம் ஃப்ரெஷ் அணி சாம்பியன் கோப்பை வெல்ல மிஸ் இந்தியா அனு கீர்த்தி வாஸ், பப்லு பிரித்விராஜ், ரியாஸ் கான் ஆகியோர் வழங்கினர்
ஜே ஜே ஜுவல்லரி மார்ட் பங்களிப்புடன் ஜீத்தோ சென்னை ஸ்போர்ட்ஸ் திருவிழாவை நார்வூட் நிறுவனம் வழங்கியது.
இதில் டீம் ஃப்ரெஷ் அணி சாம்பியன் கோப்பையையும், கைப்பற்றியது, மிஸ் யாஷஷ்வி ராயல்ஸ் அணி இரண்டாவது பரிசையும் கைப்பற்றியது.
இந்த கோப்பைகள் பப்லூ பிருத்விராஜ் மற்றும் மிஸ் இந்தியா முன்னிலையில் வழங்கப்பட்டன.
700 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டிகளில், 20 வயது முதல் 60 வயது வரையிலான பங்கேற்பாளர்கள் 8 பிரிவுகளில் 16 அணிகளாக 11 விளையாட்டுகளில் பங்கேற்றனர். .இந்த நிகழ்ச்சி தாஜ் கோரமண்டலில் நடைபெற்றது.
ரமேஷ் துகர், நேஹல் ஷா, ஜீத்து தோஷி, சிராக் ஜெயின் மற்றும் அங்கித் சிரோய்யா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஹலோ கேபிள்ஸ் & ஸ்விட்ச்கள், நவோசெம் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்தியா ஷாப்பி மற்றும் சாஃப்ரோன் ஹோம் ஆகிய நிறுவனங்கள் பங்களிப்பு நல்கின.
சிறப்பு பரிசுகளை நடிகர் ரியாஸ் கான், ஆர்த்தி அருண் ஆகியோர் வழங்கினர்.