சென்னை பெசண்ட் நகரில் LGBTQ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரூபாரு மிஸ்டர் இந்தியா அமைப்பு, சகோதரன் அமைப்புடன் இணைந்து ஒருங்கிணைத்த சமூக பிரச்சார ஊர்வலத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி , கருண்ராமன், பங்கஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆணழகன் போட்டி அமைப்பான ரூபாரு மிஸ்டர் இந்தியா, சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான சகோதரனுடன் இணைந்து இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்த பிரச்சார ஊர்வலத்தில் ரூபாரு மிஸ்டர் இந்தியா – 2022 போட்டியில் பங்குபெற்ற ஆணழகர்களும் கலந்து கொண்டனர்.
பெசண்ட் நகர் தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் முதல் அன்னை மெரி தேவலயம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள சர்வதேச அளவில் நடைபெறும் மிஸ்டர் குளோபல் அமைப்பின் நிறுவனரும் இயக்குனருமான ப்ரதித் பிரடினண்ட் தாய்லாந்தில் இருந்து வந்திருந்தார். அவருடன் மிஸ்டர் குளோபலின் பொது மேலாளர் கிட்டி கம்ஜுன்சா, இயக்குநர் கிருத்திகா உதயநிதி, புகழ்பெற்ற ஃபேஷன் ஷோ இயக்குநர் கருண் ராமன், முன்னணி ஃபேஷன் புகைப்பட கலைஞர் அமித் கன்னா, பிரபல செய்தி தொலைக்காட்சியான ஆஜ் தக் – இன் தொகுப்பாளர் அமித் தியாகி, தேசிய அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் விஷால் தவானி, தொழிலதிபர் சச்சித் சஹூன்ஜா, சமூக ஆர்வலரும் தொழிலதிபருமான மனீஷா சோர்டியா, கிரவுன் பிளாஸா நட்சத்திர விடுதியின் பொது மேலாளர் ஆனந்த் நாயர், ரூபாரு மிஸ்டர் இந்தியா அமைப்பின் மேற்கு மண்டல இயக்குனர் மானவ் ரங்கா மற்றும் துணைத் தலைவர் பங்கஜ் கர்பந்தா, மது சரண்,அனு சிங், பாடகி நித்ய ஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஊர்வலம் ரூபாரு மிஸ்டர் இந்தியா அமைப்பின் 18 வது சாம்பியன்ஷிப் போட்டிகளின் முக்கிய சமூக நிகழ்வாக அமைந்தது. சர்வதேச அளவிலான பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலம் LGBTQ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது.