சென்னை அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில், சென்ட்ரல் புட்ஸ் தொழிற்சாலை திறப்பு விழா!

0
325

சென்னை அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில், சென்ட்ரல் புட்ஸ் தொழிற்சாலை திறப்பு விழா!

சென்னை அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில், புதிதாக அமைந்துள்ள சென்ட்ரல் புட்ஸ் தொழிற்சாலையை, திரு.சங்கர் விஸ்வநாதன் , செல்வி.காதம்பரி விஸ்வநாதன், திருமதி.ரமணி, திரு.சசிகுமார் மற்றும் திரு.ஆனந்த் ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.

சென்னை அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில், தொழில்துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கேட்டரிங் சேவைகள், உணவு உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்தும் அலகு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஆயிரம் சதுர அடியில், அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களுடன் இந்த சென்ட்ரல் புட்ஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பிரத்யேகமாக இனிப்பு மற்றும் கார வகைகள், பேக்கரி பொருட்கள், சுவையூட்டிகள், உணவுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. ஆந்திர மாநிலம் தடா, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் சென்னை முழுவதிலும் உள்ள உணவகங்கள் மற்றும் தொழிற்கூடங்களுக்கு இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் அனுப்பப்படும்.

இதன் மாபெரும் திறப்பு விழாவானது, யாகரிஷி ஸ்ரீ வராஹ குருஜி யின் ஆசியுடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், வி.ஐ.டி. பல்கலைக் கழக சென்னை வளாகத்தின் துணைத் தலைவர் திரு.சங்கர் விஸ்வநாதன், செல்வி.காதம்பரி விஸ்வநாதன், வி.ஐ.டி. பல்கலைக் கழக போபால் வளாகத்தின் அறங்காவலர் திருமதி.ரமணி, சங்கர், சென்ட்ரல் புட்ஸ் சிஇஒ திரு.சசிகுமார், சென்ட்ரல் புட்ஸ் இயக்குனர் திரு.ஆனந்த் மற்றும் திரு.புகழேந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி, ரிப்பன் வெட்டி, சென்ட்ரல் புட்ஸ் தொழிற்சாலையை திறந்து வைத்தனர்.

மேலும், திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பெயரில், சிறந்த முறையில் தரமான உணவுகள் வழங்கப்படும்.

சென்ட்ரல் புட்ஸ் சேவையை விரும்புவோர்,91500 42391, 9150042392 மற்றும் 044-4312 3325 ஆகிய எண்களிலும், http://www.centralfoods.in என்ற இணையதளம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.