சென்னை அப்போலோ மருத்துவமனை 6,000-க்கும் அதிகமான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து புதிய மைல்கல் சாதனை!
- இந்தியாவிலேயே 6000-க்கும் அதிகமான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கும் முதல் மருத்துவமனை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது சென்னை அப்போலோ மருத்துவமனை.
சென்னை, சென்னை அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals Chennai] நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தில் சிறந்து விளங்கும் வகையில் 6,000-க்கும் அதிகமான ரோபோடிக் மருத்துவ நடைமுறைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறது. 2011 -ம் ஆண்டில் தனது முதன்மை மருத்துவ நடைமுறைகளில் ஒன்றாக ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, அப்போலோ மருத்துவமனையானது இந்தியாவின் மிகப்பெரிய சிறப்பு பன்நோக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை மையமாக [multispecialty robotic surgery program] இருந்து வருகிறது. இதன் மூலம் நோயாளி பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சைகள் மூலமான நேர்மறை பலன்களை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது.
நோயாளி பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சையின் நேர்மறை முடிவுகளை மேம்படுத்துவதற்காக, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அப்போலோ மருத்துவமனை கொண்டிருக்கும் உறுதியையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த மைல்கல் சாதனை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டமானது தொடர்ந்து மருத்துவ தொழில்நுட்பத்தின் புதிய எல்லைகளைக் கடந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது, சிறிய கீறல் மூலமான சிகிச்சைகள், வலியை வெகுவாக குறைத்தல், விரைவாக குணமடைதல் மற்றும் நோயாளிகள் குறுகிய காலம் மருத்துவமனையில் தங்கும் வாய்ப்பு போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. மேலும், சிறுநீரக அறுவை சிகிச்சை, பெருங்குடல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, குழந்தை நல அறுவை சிகிச்சை, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சை [Urology, Colorectal Surgery, Cardiac Surgery, Pediatric Surgery, Head & Neck Surgery, Gynecology, General Surgery] உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகளில் இந்த மருத்துவ சிகிச்சை முறை குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர். பிரதாப் சி ரெட்டி [Dr. Prathap C Reddy, Founder-Chairman of Apollo Hospitals Group] கூறுகையில், “அப்போலோ 6,000-க்கும் அதிகமான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது என்ற எளிதில் நம்பமுடியாத இந்த மைல்கல்லை எட்டியிருப்பதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இது எங்களிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருத்துவக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருவதில் நாங்கள் எந்தளவிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. .அப்போலோ மருத்துவமனைகளில் உள்ள எங்களது அற்புதமான மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்களின் கடின உழைப்பும், நிபுணத்துமிக்க திறமையுமே இந்தச் சாதனையை சாத்தியமாக்கி இருக்கிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சையானது, எங்களுடைய மருத்துவ சேவைகளை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது. எங்களிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு சிறப்பான பலன்களையும், குறுகிய காலத்தில் மீண்டு வரும் வாய்ப்புகளையும் அளித்துள்ளது. அப்போலோ இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பிற்கான தரத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் திருமதி. ப்ரீத்தா ரெட்டி [Ms. Preetha Reddy, The Vice Chairman of Apollo Hospitals Group] கூறுகையில், “சென்னை அப்போலோ மருத்துவமனைகளில் உள்ள எங்களது பன்நோக்கு மருத்துவதுறைக் குழுவைப் பற்றி நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்களது ஆழ்ந்த நிபுணத்துவம் மற்றும் உயரிய அர்ப்பணிப்பு இந்த சாதனையை சாத்தியப்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாங்கள், எங்கள் நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பை வழங்குவதற்கும், எங்களுடைய திறன்களை மேம்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்.’’ என்றார்.
சென்னை அப்போலோ மருத்துவமனைகள் மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. மேலும், இந்தியா மட்டுமின்றி அதற்கு அப்பாலும் சிறந்த சுகாதாரத்திற்கான வரையறைகளை உருவாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அப்போலோ மருத்துவமனை தனது ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை மேம்படுத்துவதற்கும், மருத்துவ கண்டுபிடிப்புகளில் புதிய எல்லைகளை வெற்றிகரமாக தொடவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.