சென்னை – அண்ணா நகரில், பிரம்மாண்டமான புதிய ஷோரூமினைத் திறந்தது, ஜூவல்ஒன்!

0
157

சென்னை – அண்ணா நகரில், பிரம்மாண்டமான புதிய  ஷோரூமினைத் திறந்தது, ஜூவல்ஒன்!

  • தொடக்க விழாச் சலுகையாக ஆகஸ்ட் 21 முதல் 31 வரை தங்க நகைகள் சவரனுக்கு ரூ. 1,000 மற்றும் வைர நகைகள் கேரட்டிற்கு ரூ. 10,000 தள்ளுபடி என வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குகிறது!

சென்னை, பெண் மனதைப் புரிந்த பொன் என்ற தாரக மந்திரத்துடன் திகழ்ந்து வரும் பெண்களின் மனம் கவர்ந்த தங்க நகை ஆபரண பிராண்டும், தமிழகத்தைச் சேர்ந்த 38 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட எமரால்ட் குழுமத்தின் ஒரு அங்கமுமாகிய ஜூவல்ஒன், (JewelOne), சென்னை – அண்ணா நகர், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இன்று (21 ஆகஸ்ட் 2022) மிகப் பிரம்மாண்டமான ஷோரூமைத் திறந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான ஷாப்பிங் அனுபவத்தை அளிக்கும் வகையில் இப்புதிய கடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் (Emerald Jewel Industry India Limitedநிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு.K. சீனிவாசன், இணை மேலாண் இயக்குநர் திருமதி. சக்தி சீனிவாசன், இயக்குநர் திரு. தியான் சீனிவாசன், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், தலைமை செயல் அதிகாரி திரு. N. வைத்தீஸ்வரன் அவர்களின் முன்னிலையில் ரிப்பன் வெட்டி, பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

திறப்பு விழாவின் போது, எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. K. சீனிவாசன் பேசுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய புதிய அண்ணா நகர் ஷோரூம் கிரவுண்ட் + மெஸ்ஸனைன் தளங்களில் (Ground Plus Mezzanine Floor) 2,900 சதுர அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகைக்கடைகளின் மையமாக மாறிவரும் முக்கிய சாலையில் இந்த ஷோரூம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.

திறப்பு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜூவல்ஒன் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வைர நகைகளில் பல ஆச்சரிய சலுகைகளை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, செமி பிரீசியஸ் ஸ்டோன்கள் (Semi-Precious Stones) பதிக்கப்பட்ட ஜூவல்ஒன் டான்சிங் பீகாக் (JewelOne Dancing Peacock) எனும் கவனம் ஈர்க்கும் மயில் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது. இது விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட – இயல்பான அளவைவிடப் பெரிய 4.5 அடி நடன மயில் ஆகும். மேலும் சென்னையில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ரசித்து மகிழ்ச்சியடைந்த செஸ் ஆர்வலர்களுக்காக சதுரங்க கேரக்டர்களைக் கொண்டு தயாரித்த நகைகளையும் ஜூவல்ஒன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.N. வைத்தீஸ்வரன் கூறுகையில், “சந்தைக்கு உகந்த வகையில் பொருத்தமாக இருப்பதற்காக ஜூவல்ஒன் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. கடந்த 17 மாதங்களில் சியாரா (Chiara – குறைந்த விலை வைர வரிசை), அயனா (Ayanaa – மலர் வரிசை), நிர்ஜரா (Nirjhara – நீர்வீழ்ச்சி தீம் சார்ந்த வைர வரிசை), ஜீனா (Zheena – அதிர்வுமிக்க வண்ணகற்களின் வரிசை), டிலைட்ஸ் (Delites – இலகுரக நகை வரிசை) ஆகிய 5 தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. புதிய டிசைன்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இவை விருந்தாகத் திகழும். 4.99% வேல்யு அடிஷனில் இருந்து தொடங்கும் தயாரிப்புகளை ஜூவல்ஒன் கொண்டுள்ளது. இந்த ஷோரூமில் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சேவை வசதி உண்டு.

ரீடெய்ல் நகை விற்பனையாளர்களுக்கான விருதுகளில், ரீடெய்ல் புரோமோஷன் ஆஃப் த இயர் அவார்ட் 2022‘ (Retail Promotion of the Year Award 2022)-க்கு ஜூவல்ஒன் நிறுவனம் ரீடெய்ல் ஜூவல்லர் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘இந்தியா ரீடெய்ல் எக்லன்ஸ் அவார்ட்ஸ் 2022’ (India Retail Excellence Awards 2022)-க்கான நகைப் பிரிவில் பெஸ்ட் ரீடெய்லர் ஆஃப் த இயர் 2022‘ (Best Retailer of the Year 2022) என்ற விருதை ஆர்.ஏ.ஐ. (RAI) அமைப்பிடமிருந்து பெற்றது. இந்த இரண்டு விருதுகளையும் ஆகஸ்ட் 2022-இல் இந்த பிராண்ட் பெற்றுள்ளது. இந்த விருதுகள், 17 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிராண்டின் புதிய பயணத்திற்கான சாட்சியங்களாகும்” என்றார்.

ஜூவல்ஒன் பிராண்டிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 13 கிளைகள் உள்ளன. இந்த பிராண்ட் பிரான்சைஸ் மற்றும் பிசினஸ் பார்ட்னர்கள் மூலமாக மாநிலம் மற்றும் தேசிய அளவில் புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், திருமங்கலம் மெட்ரோ நிலையம் அருகில், 233-235, 2-ஆவது அவென்யூ, L பிளாக், அண்ணா நகர் (மேற்கு), சென்னை என்ற முகவரியில் அமைந்துள்ள ஜூவல்ஒன் ஷோரூமைப்  பார்வையிட்டு மகிழலாம்.