சென்னையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய லக்ஸுரி டெர்ம் ஏஸ்தெடிக் கிளினிக்கை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் கிளினிக் மருத்துவர் ஆண்ட்ரியா குருநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்

0
192

சென்னை அபிராமபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் பயற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் சிறந்த சரும மற்றும் முடி பராமரிப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை  முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.
 அர்மேனியாவில் பயிற்சி பெற்றவரும், இந்த கிளினிக்கின் தலைமை  மருத்துவருமான ஆண்ட்ரியா குருநாதன் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார்.
 மேலும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டு சொந்த காலில் நிற்கும் மன உறுதியுடன் அழகுக்கலை பயிற்சி பெற்ற பெண் நிபுணர்கள் இங்கு பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு ஆகும்.
 இந்த திறப்பு விழாவில்,  சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, ஐடியல் பீச் ரிசார்ட் உரிமையாளர்  போஸ், நந்தகுமார் ஐஆர்எஸ், பிரியா தயாநிதி மாறன், இணை ஆணையர் ரம்யா பாரதி, இலங்கை வனத்துறை அமைச்சர் பவித்ரா, கீகீ, சுமா ஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.