சென்னையில் நடைபெற்ற மகளிர் தொழில்முனைவோர் மாநாட்டில் செஸ் வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபுவிற்கு விஷனரி அச்சீவர் விருது வழங்கப்பட்டது

0
164
சென்னையில் நடைபெற்ற மகளிர் தொழில்முனைவோர் மாநாட்டில் செஸ் வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபுவிற்கு விஷனரி அச்சீவர் விருது வழங்கப்பட்டது.
சென்னையில் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மிஷன் மற்றும் நேச்சுரல்ஸ் அழகு நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து  “மகளிர் தொழில்முனைவோர்” மற்றும் ஆர்வலர்களுக்கான மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் டான்சிம் நிறுவனம், வீடோ எனும் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து “தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் – சென்னை மகளிர் வட்டம்”  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னொசண்ட் திவ்யா,  திட்ட இயக்குநர் சிவராஜா, நேச்சசுரல் அழகு நிலைய நிறுவனர் சி.கே.குமரவேல் மற்றும் வீடோ நிறுவனர் காதம்பரி ஆகியோர் முன்னிலையில் உருவாக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வின்போது  தொழில் வாய்ப்புகள் மற்றும் தலைசிறந்த வல்லுனர்களின் பயிற்சி பட்டறைகளும் இந்த மாநாட்டில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்தியா முழுவதும் மகளிர் தொழில்முனைவோரை வளர்க்கும் சுற்றுச்சூழல் அமைப்பான வீடோ  2015ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருவதாக தெரிவித்த இந்த அமைப்பின் நிறுவனர் காதம்பரி, இதுவரை 10000 க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர்கள் இதன் மூலம்  பயனடைந்துள்ளதாகக் கூறினார். இந்த மாநாட்டில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
மகளிர் தொழில்முனைவோர் மாநாட்டில்,  தமிழ்நாடு அரசின் டான்சிம் நிறுவனம்,  மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து “தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் – சென்னை மகளிர் வட்டத்தை உருவாக்கி உள்ளது.  பின்னர் உரையாற்றிய இன்னொசண்ட் திவ்யா, மகளிர் திறன்மேம்பாடு, நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், உலக அளவில் தொழில் மற்றும் பணியிட வாய்ப்புகளில் 47 விழுக்காடு பெண்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு 19 விழுக்காடாக உள்ள நிலையில் தமிழ்நாடு கிராமப்புறங்களில் ஆச்சரியமூட்டையும் வகையில் பெண்களில் பங்களிப்பு 75 விழுக்காடாக உள்ளது என குறிப்பிட்டார். ஆனால் நகர்புறங்களில் 23 விழுக்காடாக உள்ளது என்று கூறிய இன்னொசண்ட் திவ்யா, வீட்டில் இருந்து புறப்படும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் இந்த விழுக்காட்டை அதிகரிக்க முடியும் என்றார். அதேபோல பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகள் தொடர்பாக திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பெண்களுக்கான வாய்ப்பினை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
(மேடைப்பேச்சு: இன்னொசண்ட் திவ்யா,  மேலாண்மை இயக்குநர்- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்)