சென்னையில், குறைந்த கிளைசெமிக் இண்டக்ஸ் கொண்ட ‘கேசரி கோல்டன் சுகர்’ அறிமுகம்!
இந்தியாவிலேயே முதல் முறையாக இயற்கை முறையிலான இத்தயாரிப்பை வெளியிடுகிறது, தத்வா ஹெல்த் & வெல்னஸ்!
சென்னை, ஏப்ரல் 2023
முன்னணி உணவு நிறுவனங்களில் ஒன்றாகிய தத்வா ஹெல்த் அண்ட் வெல்னஸ் (Tatva Health and Wellness) சுத்திகரிக்கப்படாத, ரசாயனங்கள் – வேறு சேர்க்கை பொருட்கள் இல்லாத, இயற்கையாகவே குறைந்த கிளைசெமிக் இண்டக்ஸ் (Low-Glycemic Index) கொண்ட ‘கேசரி கோல்டன் சுகர்’ (Kesari Golden Sugar) சர்க்கரையை சென்னையில் அறிமுகப்படுத்தியது.
தத்வா ஹெல்த் அண்ட் வெல்னஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. சச்சின் ஜெயின் (Mr. Sachin Jain) கூறுகையில், “கேசரி கோல்டன் சுகரை சென்னை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தொற்றுநோய்க்குப் பிந்தைய காலக்கட்டத்தில், நுகர்வோர் ஆரோக்கிய உணர்வு மற்றும் சுய விழிப்புணர்வுடன் எதை உட்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்விளைவாக, உணவுப் பிரிவில் பல்வேறு புதுமைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் சர்க்கரை சந்தையை உற்று பார்க்கையில், சர்க்கரையை ஆரோக்கியமாகவோ அல்லது சிறந்ததாகவோ மாற்ற எந்தவொரு ஆராய்ச்சியும், மேம்பாடும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. உண்மையில், இப்போது நுகர்வோர் ஆரோக்கியமான பதிலீடை தேடிவருகிறார்கள். அதை கண்டுபிடிப்பது இன்று கடினமாக உள்ளது. சர்க்கரை தொடர்பான பிரச்சனைகளை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் பார்த்து வருகிறோம். உங்களது ஆரோக்கியத்தை மட்டும் கவனத்தில்கொண்டு, அதே நேரத்தில் சுவையில் சமரசமும் செய்துகொள்ளாமல் உட்கொள்ளக்கூடிய ஒரு தயாரிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
ஆஸ்திரேலியாவின் உள்ள நியூகேன் (Nucane) நிறுவனத்துடன் நாங்கள் கூட்டுசேர்ந்துள்ளோம். இதன் மூலம் அவர்களின் உலகளாவிய காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் ‘கேசரி கோல்டன் சுகரை’ அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கேசரி கோல்டன் சுகர் சுத்திகரிக்கப்படாதது, ரசாயனங்கள் அல்லது சேர்க்கைகள் எதுவும் இல்லாத, இயற்கையாகவே குறைந்த கிளைசெமிக் இண்டக்ஸ் கொண்டது. உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் இது உறுதியாக உதவும். ஆரோக்கியமான சர்க்கரையைத் தேடும் நுகர்வோருக்கு இது ஒரு சரியான மாற்றாக இருக்கும்” என்றார்.
இந்தப் புதிய தயாரிப்பு பெங்களூருவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம், இந்த பிராண்டை விரைவில் மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு, www.kesarisugar.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.