சென்னையில் அழகு மற்றும் வாழ்வியல் நோய்களுக்கான தீர்வாக நிவீணா சிகிச்சை மையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு.திருச்சி சிவா,ஏ.வீணா விலாஷினி,கே.ஜி.ராஜேஸ்வரி,வி.எஸ்.ஹேமமாலினி, எஸ்.கவிதா, கே.எஸ்.மோனிவிகாசினி ஆகியோர் தொடங்கி வைத்தனர்

0
144
சென்னையில் அழகு மற்றும் வாழ்வியல் நோய்களுக்கான தீர்வாக நிவீணா சிகிச்சை மையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு.திருச்சி சிவா,ஏ.வீணா விலாஷினி,கே.ஜி.ராஜேஸ்வரி,வி.எஸ்.ஹேமமாலினி, எஸ்.கவிதா, கே.எஸ்.மோனிவிகாசினி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கராத்தே வி முத்துக்குமார்,  நிவீணா மையத்தின் தலைவர் மருத்துவர் ஏ.வீணா விலாஷினி, துணைத் தலைவர் கே.ஜி.ராஜேஸ்வரி,மேலாண் இயக்குனர் வி.எஸ்.ஹேமமாலினி, இயக்குனர் எஸ்.கவிதா, நிர்வாக அதிகாரி கே.எஸ்.மோனிவிகாசினி,   மற்றும்  தொலைக்காட்சி நட்சத்திரங்கள், நடிகர்கள், உட்பட 150க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
அழகியல் மற்றும் அழகுசாதனவியல் துறையின் தேவையை கருத்தில் கொண்டு நிவீணா மையம் தொடங்கப்பட்டுள்ளது.
 க்யூரா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து  நிவீணா மையத்தின் தலைவர் மருத்துவர் ஏ. வீணா விலாஷினி தொடங்கியுள்ள  இரண்டாவது கிளை இதுவாகும்.
நிவீணா மையத்தின் தலைவர் மருத்துவர் ஏ. வீணா விலாசினியுடன், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, மேலாண் இயக்குனர் வி.எஸ். ஹேமமாலினி, இயக்குனர் எஸ். கவிதா,   நிர்வாக அதிகாரி கே.ஆர்.மோனிவிகாசினி ஆகிய 4 பெண்கள் இணைந்து நிவீணா மையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கும், வெற்றிக்கும் கைகோர்த்துள்ளனர்.