சிம்ஸ் மருத்துவமனை சார்பில் கொண்டாடப்பட்ட வாவ் மகளிர் தின விழா!

0
237
சிம்ஸ் மருத்துவமனை சார்பில் கொண்டாடப்பட்ட வாவ் மகளிர் தின விழாவில்  நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், காயத்ரி ரவி மற்றும் பத்மப்ரியா ரவி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
 
கிண்டி ரமடா ப்ளாசா ஹோட்டலில் சிம்ஸ் மருத்துவமனை சார்பில் வாவ்(wow) மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
 இதில் பல்வேறு துறைகளை சார்ந்த பெண் ஆளுமைகளை சிறப்பிக்கும் வகையில் வாவ் விமன்ஸ் 2023 விருதுகள் வழங்கப்பட்டன.
நடிகை இனியா, மைண்ட் அண்ட் மாம் நிறுவன தலைமை செயல் அதிகாரி பத்மினி ஜானகி, நடிகை ஆர்யா கிருஷ்ணா, உளவியல் நிபுணர் காயத்ரி உள்ளிட்டோர் இந்த விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
மேலும் ஷீ கிளினிக் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அழகியல் மற்றும் தோல் மருத்துவர்  கே ஆர் சர்மதா, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர்களான சந்தியா வாசன், மற்றும் என் எஸ் சாரதா, இரத்தவியல் நிபுணர் மருத்துவர் அருணா ராஜேந்திரன், காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் ஹெபடாலஜி ஆலோசகர் மருத்துவர் காவ்யா ஹரிகா டெண்டுகூரி உள்ளிட்டோர் அழகியல்,  மற்றும் பிற உடல்நலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து உரையாற்றினர்.
இதைத் தொடர்ந்து திருமதி பத்மப்ரியா ரவி வாவ் விமன் ஆஃப் எக்ஸெலன்ஸ் விருதுகளை   திருமதி பத்மா ஜானகி, காயத்ரி, இனியா உள்ளிட்டோருக்கு விருதுகளை கொடுத்தார்.
 இந்த நிகழ்ச்சியில்  நடனம் மற்றும் பாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மேலும் கண்கவர் ஃபேஷன் ஷோவும் நடத்தப்பட்டது. இதில் சாந்தி பிரேம்ஜி உள்ளிட்டோர் ஒய்யார நடைபோட்டு அசத்தினார்.
 சிறப்பு விருந்தினர்களாக நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகை காயத்ரி ரவி, பத்மப்ரியா ரவி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.