சர்வதேச கடலோர தூய்மை தினத்தை ஒட்டி நடிகை சாக்ஷி அகர்வால்,  பிளெஸ்ஸிங் ஏ.மணிகண்டன்,  மல்லிகா சவுத்ரி உள்ளிட்டோர் 1500  பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து  மெரினா கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு சுமார் 5 டன் குப்பைகளை அகற்றினர்

0
177

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி சர்வதேச கடலோர தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ஏஞ்சல்ஸ் ஆஃப் மெரினா சார்பில் பிரமாண்ட தூய்மை இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் 1500 பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு சுமார் 5 டன் குப்பைகளை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த நிகழ்வில் ஏஞ்சல்ஸ் ஆஃப் மெரினா அமைப்பின் அறங்காவலர் கே.கே.குமரனும் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக பிளெஸ்ஸிங் ஏ.மணிகண்டன் குறிப்பிடும்போது, ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலையில் தனது குடும்பம் மற்றும் ஓட்டுனருடன் மெரினாவில் தூய்மைப்பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.  தற்போது நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மெரினாவில் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏஞ்சல்ஸ் ஆஃப் மெரினா அமைப்பு சார்பில் சிறப்பு டி.ஷர்ட்கள் வழங்கப்பட்டன.