சரும பராமரிப்பில் சிறந்து விளங்கும்  CHOSEN- முன்னணி நிறுவனத்தின் 5 வது ஆண்டு விழாவில் New Brand Logo வை  இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் டாக்டர். ரெனிட்டா ராஜன் வெளியிட்டனர்

0
174
சரும பராமரிப்பில் சிறந்து விளங்கும்  CHOSEN- முன்னணி நிறுவனத்தின் 5 வது ஆண்டு விழாவில் New Brand Logo வை  இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் டாக்டர். ரெனிட்டா ராஜன் வெளியிட்டனர்
நாட்டின் அடையாளத்தை மேம்படுத்தப்பட்டதாக மாற்றுவதற்கு மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உதவ வேண்டும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள்.
சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள அரங்கில் HIFIVE CONCLAVE உடன் இணைந்து CHOSEN  நிறுவனத்தின் 5 வது ஆண்டு விழாவை கொண்டாடியது.சரும பராமரிப்பில் சிறந்து விளங்கும்  CHOSEN- முன்னணி நிறுவனத்தின் 5 வது ஆண்டுவிழாவில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, ரம்யா சுப்பிரமணியன், மருத்துவர்கள் ரெஜிட்டா ராஜன், பால் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் மற்றும் நிலைத்தன்மையின் மரபு, ஆதார அடிப்படையிலான தோல் பராமரிப்பு மற்றும் நீண்ட ஆயுளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்ட CHOSEN, இந்திய தோலுக்கு ஏற்றவாறு தோலியல் நிபுணர்களால் வழிநடத்தப்பட்டு மக்கள் மத்தியில் நற்சான்றுடன் புகழ்பெற்று விளங்குகிறது.
இன்று நடைபெற்ற 5ஆம் ஆண்டுவிழா மாநாட்டை,  தொகுப்பாளர்கள் ரம்யா சுப்பிரமணியன் மற்றும் பாவனா ராதா கிருஷ்ணன் ஆகியோர் நெறிப்படுத்த பிரபல நடிகை ரெஜினா கஸாண்ட்ரா, நடிகை ரம்யா சுப்பிரமணியன், ராகினி முரளிதரன், மருத்துவர்கள் ரெனிட்டா ராஜன் மற்றும் பால் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.
 இந்த நிகழ்ச்சியில்,   சூரிய பாதுகாப்பு மற்றும் சருமத்தின் நீண்ட ஆயுளுக்கான பராமரிப்பு, முழுமையான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துதல், தாய் சேய் தோல் பராமரிப்பு,  நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி குறித்த குழு விவாதங்கள் நடைபெற்றன. தொழிலதிபர்கள்,  மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய வணிகர்களும்  பங்கேற்றனர்.
நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வு குறித்த அமர்வில் மருத்துவர் பால் மாணிக்கம் பங்கேற்றார். நீண்ட ஆயுள் மற்றும் நோய்த்தடுப்பு குறித்த அவரது உரை, பங்கேற்பாளர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தியது.  குடல் ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் குறித்த நிபுணத்துவத்துடன், அனைவருக்கும்  நலவாழ்வை அணுக அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை மருத்துவர் பால் மாணிக்கம் வலியுறுத்தினார்.
இசைப்புயல் A.R. ரஹ்மான் CHOSEN இன் புதிய அடையாளத்தை வெளியிட்டார்.  இசையமையிலும் மற்றும் புதுமையிலும் சர்வதேச சின்னமாக விளங்கும் A.R. ரஹ்மான் மூலம் CHOSEN இன் புதுப்பிக்கப்பட்ட பிராண்ட் அடையாளத்தை வெளியிட்டது ஒரு பொன்னான தருணம்.   அவரது காலத்தை வென்ற கலைத் தத்துவம்  நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்தின் அடையாளமாக திகழ்ந்தது.
CHOSEN வளர்ந்து வரும் சமூகம் மற்றும் புதுமையில் கவனம் செலுத்துவதன் மூலம், அழகு மற்றும் ஆரோக்கியத்தில் முன்னணியாக தொடர்கிறது.
பின்னர் மேடையில் பேசிய இசைப்புயல் A.R. ரஹ்மான்:
இந்த நாட்டினுடைய முகங்களையும் அடையாளங்களையும் நீங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். மேற்கத்திய கேமராக்கள் நம்மை படம் பிடிக்கும் போது கருப்பாகத்தான்  காட்டும்.அந்த நிலையும் கூட தற்போது மாறி இருக்கிறது.அனைத்து துறைகளிலும் முன்னெடுப்புக்கான முயற்சியில் நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறீர்கள் என்றார்.மனிதத்தின் வளர்ச்சிக்காக ஆராய்ச்சிகள் நடப்பதும் நாட்டினுடைய அடையாளத்தை மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் நடப்பதும் ஊக்கம்  அளிப்பதாக அவர் தெரிவித்தார்  ஆகவே ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் நம் நாட்டின் அடையாளத்தை சர்வதேச அளவில் மேம்பட்டதாக மாற்றுவதற்கு எல்லைகளை கடந்து பணியாற்ற வேண்டும்.எனவும் வேண்டுகோள் விடுத்தார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சோசென் (CHOSEN) டெர்மட்டாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரெனிட்டா ராஜன்:
பொதுவா நம்முடைய தோலின் அமைப்பிற்கு  நிறைய விஷயங்கள் டெர்மடாலஜி மூலம் எளிதில் பெற முடியாது, மேற்கத்திய தோள்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தான் நம் நாட்டில் கிடைக்கின்றது.
அதையும் தாண்டி நம்முடைய தோள் அமைப்பிற்கு இது போன்ற பொருட்களை பயன்படுத்துவர்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டு அதற்கேற்றவாறு தயாரிக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய ஐந்தாவது ஆண்டு விழாவின் கருத்தாக இருக்கிறது.நம்முடைய தோள் அமைப்புக் குறித்து மேலும் கற்றுக் கொண்டிருக்கிறோம் நமது பருவ நிலையில் மாற்றங்கள் இருக்கும்போது அவர்களுக்கு தோல் சம்மந்தமான பிரச்சனைகள் வருகிறது அது குறித்த ஆய்வு தான் இந்த நிகழ்ச்சி.
மேலும் இந்த ஐந்தாவது ஆண்டு விழாவில் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டு எங்கள் நிறுவனத்தின் புதிய லோகோவை வெளியிட்டதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.