சமூக சேவகர், அப்சரா ரெட்டி தலைமையிலான Good Deeds Club சார்பில், வனவிலங்கு பாதுகாப்பிற்காக வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு 3 லட்சம் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவாவிடம் வழங்கினார்

0
161
சமூக சேவகர், அப்சரா ரெட்டி தலைமையிலான Good Deeds Club சார்பில், வனவிலங்கு பாதுகாப்பிற்காக வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு 3 லட்சம் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவாவிடம் வழங்கினார்.
தமிழ்நாட்டின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும், அதற்கான சமூக ஆதரவின் அவசரத் தேவை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வண்டலூர் மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும்   அதிகாரிகள், பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்களுடன்  Good Deeds Club உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.
 வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு வழங்கப்பட்ட  இந்த நன்கொடை வாழ்விட மேம்பாடு, விலங்கு பராமரிப்பு மற்றும் எதிர்கால சந்ததியினரிடையே வனவிலங்குகள் குறித்த புரிதலை வளர்க்க, வடிவமைக்கப்பட்ட கல்வித் திட்டங்களுக்கு நேரடியாக நிதியளிக்கும்.
ஜி.டி.சி. யின், விலங்குகள் தொடர்பான இந்த நன்முயற்சியையும், அர்ப்பணிப்பையும்  நடிகை நிக்கி கல்ராணி பாராட்டினார். அவர் உரையாற்றும்போது,  இந்நிகழ்ச்சியின் மூலம், உயிரினங்களும் அவற்றின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதின்  ஒரு பகுதியாக இருப்பதில் தான் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
மிருகக்காட்சி சாலையின் இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா, குட் டீட்ஸ் கிளப் மற்றும் அப்சரா ரெட்டியின் தாராளமான ஆதரவுக்கு  மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
குட் டீட்ஸ் கிளப் நிறுவனர் அப்சரா ரெட்டி ,  தங்களது குட் டீட்ஸ் கிளப் பெரும்பாலும் கவனிக்கப்படாதவற்றை சீரமைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்றும்  தற்போது வழங்கப்பட்டுள்ள நன்கொடை வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.  இந்நிகழ்ச்சிக்கு, ஆதரவை வழங்கிய நிக்கி கல்ராணிக்கும் மற்றவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.