கோவையில் Mr Miss & Mrs தமிழகம் 2022 போட்டிக்கான தேர்வு

0
142

கோவையில் Mr Miss & Mrs தமிழகம் 2022 போட்டிக்கான தேர்வு

நடிகை அபிநயா, ஜான் அமலன், நடிகை அபிராமி, நடிகை ரெத்திகா, திருமதி இந்தியா எர்த் 2018 ரிங்கி ஷா உள்ளிட்ட பிரபலங்கள் முன்னிலையில் Mr Miss & Mrs தமிழகம் 2022′ போட்டிக்கான மாபெரும் போட்டியாளர்களுக்கான  தேர்வு கோவையில் நடைபெற்றது

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் Mr,Miss/Mr Tamizhagam2022 கான நேர்காணல் கோயம்புத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில்  நடைபெற்றது. சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பேஷன் டிசைனர் அபர்ணா சுங்கு,  நடிகை அபிராமி, ஜான் அமலன்,  நடிகை அபிநயா,  Mr.Fashion World International 2021 தனசேகர்,  நடிகை ரெத்திகா,  திருமதி இந்தியா எர்த் 2018 ரிங்கி ஷா உள்ளிட்டோர் நடுவர்களாக கலந்து கொண்ட ‘Mr, Miss & Mrs தமிழகம் 2022’ போட்டிக்கான மாபெரும் நேர்காணல் தேர்வு நடைபெற்றது.

ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என 3 பிரிவினருக்கான இந்த மாபெரும் போட்டியாளர் தேர்வில், தமிழகம் முழுவதிலும்இருந்து 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது திறமைகளைக் காட்டி, மேடையில் அன்ன நடை போட்டனர். மேலும், இந்த நிகழ்வில், தேர்வான போட்டியாளர்கள், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ‘Mr, Miss & Mrs தமிழகம் 2022’  போட்டியில் பங்கேற்க உள்ளனர். மேலும், இவ்விழாவில் கண்கவர் IFL ஃபேஷன் ஷோவும் நடைபெற்றது.