கோவாவில் நடைபெற்ற ரூபரூ மிஸ்டர் இந்தியா போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னையைச் சேர்ந்த திரு. ஆதித்யா சுப்ரமணியன் மற்றும் முஷ்தாக் முகமது ஆகியோர்  சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளனர்

0
171
கோவாவில் நடைபெற்ற ரூபரூ மிஸ்டர் இந்தியா போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னையைச் சேர்ந்த திரு. ஆதித்யா சுப்ரமணியன் மற்றும் முஷ்தாக் முகமது ஆகியோர்  சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.
ரூபரூ மிஸ்டர் இந்தியா 20வது ஆண்டின் இறுதிப் போட்டி கோவாவில் உள்ள போக்மல்லோ கடற்கரை ரிசார்ட்டில் நடைபெற்றது.
இது இந்தியா முழுவதும் சிறந்த மற்றும் அழகான மனிதர்களை அடையாளம் காண்பதில் பெயர் பெற்ற போட்டி ஆகும். ஏற்கனவே ரூபரூ பல தேசிய மற்றும் மண்டல  வெற்றியாளர்களை உருவாக்கி உள்ளது.
இந்த ஆண்டு தேசிய அளவில் 30,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு,  தகுதியுடைய 30 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்த ஆதித்யா சுப்பிரமணியன் மற்றும் முஷ்தாக் முகமது ஆகியோர் நடப்பு ஆண்டில்  பல்வேறு சுற்றுத் தேர்வுகள் மற்றும் தனிப்பட்ட நேர்காணல்களில் வெற்றி பெற்று  இறுதிப் போட்டியாளர்களாக  தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
கிராண்ட் ஃபைனலில் ஆதித்யா மற்றும் முஷ்தாக் ருபாரு மிஸ்டர் கபல்லெரோ யுனிவர்சல் இந்தியா 2024 மற்றும் மிஸ்டர் டூரிசம் வேர்ல்ட் 2024 விருதுகளைப் பெற்றனர்.
மேலும் சர்வதேச போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
ஆதித்யா சுப்ரமணியன், இந்தாண்டு செப்டம்பரில் வெனிசுலாவில் நடைபெறவுள்ள கபல்லெரோ யுனிவர்சல் இந்தியா 2024 லும்,
நவம்பரில் வியட்நாமில் நடைபெறவுள்ள மிஸ்டர் டூரிசம் வேர்ல்ட் இந்தியா 2024 இல்,  முஷ்தாக் முகமதுவும் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.