கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ்-ன் T.U.L.I.P. (துலிப்) காப்பீடு திட்டம் அறிமுகம்!

0
128

கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ்-ன் T.U.L.I.P. (துலிப்) காப்பீடு திட்டம் அறிமுகம்!

  • வருடாந்திர பிரீமியத்தின் மீது 100 மடங்கு வரை ஆயுள் காப்பீட்டை வழங்கும் யூனிட்டோடு இணைக்கப்பட்டுள்ள நீள்காலக் காப்பீடு! 

சென்னை, கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (Kotak Mahindra Life Insurance Company Limited), T.U.L.I.P. – (Term with Unit Linked Insurance Plan) என்னும் யூனிட்டுடன் இணைக்கப்பட்ட நீள்காலக் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்யப்படுவதை இன்று அறிவித்திருக்கிறது. T.U.L.I.P. என்பது, வருடாந்திர பிரீமியத் தொகை மீது 100 மடங்கு வரை ஆயுள் காப்பீட்டை வழங்குகிற, யூனிட்டோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு நீள்காலக் (Term) காப்பீடு திட்டமாகும். உயிருக்கு ஆபத்தான நோய்கள் மற்றும் விபத்தின் காரணமாக ஏற்படும் இறப்புக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குகிறது.

கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. மகேஷ் பாலசுப்ரமணியன், இப்புதிய திட்டம் குறித்து கூறுகையில், “கோடக் லைஃப் (Kotak Life) நிறுவனத்தில் வாடிக்கையாளர் நலனை மையப்படுத்துதல் என்ற அம்சம் அதன் குறிக்கோளாகவும் செயல்பாடாகவும் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஒரு குறித்த கால திட்டம் (Term Plan) போல எமது வாடிக்கையாளர்களுக்கு விரிவான பாதுகாப்பை வழங்கும் துலிப், ஒரு ULIP திட்டம் (யூனிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டம்) போல அவர்களது சொத்து மதிப்பை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. எமது வாடிக்கையாளர்களின் மிக முக்கிய நிதிசார் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்வதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது” என்றார்.

T.U.L.I.P. திட்டம், தனிநபர்களுக்கு நிதி ரீதியிலான திறனதிகாரத்தை வழங்கும் ஒரு முன்னேற்ற நடவடிக்கை. ‘Hum Hain… Hamesha’, என்ற எமது பிராண்டின் வாக்குறுதியின் செயல் வடிவமே இத்திட்டம். எமது வாடிக்கையாளர்களது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களுக்கு துணை நிற்போம் என்பதே எமது பிராண்டின் வாக்குறுதி.

T.U.L.I.P (துலிப்)-ன் தனித்துவ சிறப்பம்சங்கள்:

  • வருடாந்திர பிரீமிய தொகையின் மீது 100 மடங்கு வரை ஆயுள் காப்பீடு
  • நிறுவனத்தால் சேர்த்து வழங்கப்படும் முதிர்வு பலன்களின் ஒரு பகுதியாக 30% வரை ஃபண்டு மதிப்பீன் மீது 30% வரை லாயல்ட்டி கூடுதல் பலன்கள்
  • 10வது, 11வது, 12வது மற்றும் 13வது ஆண்டில் பிரீமியம் ஒதுக்கீடு              கட்டணங்களின் 2 மடங்கு தொகை திரும்ப வழங்கப்படும்.
  • பாலிசியின் 11வது ஆண்டு முதல் இறப்புக்கான கட்டணத்தொகையின் 1 முதல் 3 மடங்கு வரை திரும்ப வழங்கப்படும்
  • நிதிசார் அவசர நிலை ஏற்படுமானால், அந்நேர்வின்போது, பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும் நெகிழ்வுத்திறன் வசதி
  • விபத்து காரணமாக உயிரிழப்பு பலன் மற்றும் உயிருக்கு ஆபத்தான தீவிர நோய்களுக்கான ரைடர்
  • பணத்தை முதலீடு செய்வதற்கு தேர்வு செய்ய எட்டு ஃபண்டு விருப்பத்தேர்வுகள்

இது தொடர்பான வீடியோவை காண இங்கு கிளிக் செய்யவும் www.kotaklife.com