கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஹைதராபாத் மருத்துவமனையின் உரிமம் ரத்து!

0
149

கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஹைதராபாத் மருத்துவமனையின் உரிமம் ரத்து!

நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த காரணத்தால், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஹைதராபாத் மருத்துவமனையின் உரிமத்தை தெலங்கானா அரசு ரத்து செய்துள்ளது. மேலும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் புகாரில் மூன்று மருத்துவமனைகளுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு, தெலங்கானா உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் சம்பவங்கள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க அரசு ஒரு வாட்ஸ்அப் எண்- 9154170960 ஐ வெளியிட்டுள்ளது. இந்த வாட்ஸப் எண்ணில் தற்போதுவரை 26 புகார் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.