குடியரசுத்தலைவர் மாளிகையின் வருடாந்திர “தோட்டத்திருவிழா”வை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்

0
142

குடியரசுத்தலைவர் மாளிகையின் வருடாந்திர “தோட்டத்திருவிழா”வை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்

புதுதில்லி, குடியரசுத்தலைவர் மாளிகையின் வருடாந்திர “தோட்டத் திருவிழாவை குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நேற்று  (10.02.2022) திறந்து வைத்தார்.

இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையின் முகலாய தோட்டம், பிப்ரவரி 12, 2022 முதல்  மார்ச் 16, 2022 வரை (பராமரிப்பு தினமான திங்கட்கிழமைகள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (கடைசி அனுமதி மாலை 4 மணிக்கு)  பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு https://rashtrapatisachivalaya.gov.in or https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx.  இணையதளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டும், நேரடி நுழைவு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இந்த ஆண்டு தோட்டத் திருவிழாவின் 11 வகையான துலிப் மலர்கள், பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிறிய ரக கற்றாழையுடன் காற்றைத் தூய்மைப்படுத்தக் கூடிய தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.