கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு joy of giving அறையை கல்லூரி முதல்வர் திருமதி.சாந்தி மலர், திரு.சந்தோஷ்ராஜ் மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100-ன் தலைவர் திரு.ராஜேஷ் போஹாரா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து, அதன் பல்துறை சமூக சேவை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு joy of giving அறையை கட்டமைத்துள்ளன. இந்த அறை, கல்லூரி முதல்வர் திருமதி.சாந்தி மலர், ரவுண்ட் டேபிள் இந்தியா பகுதி 2-ன் தலைவர் திரு.சந்தோஷ்ராஜ் மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100-ன் தலைவர் திரு.ராஜேஷ் போஹாரா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
நிகழ்வில் பேசிய ராஜேஷ் போஹாரா, சமூக சேவை என்பது மிகவும் திருப்திகரமான மற்றும் பெருமைமிகு நடவடிக்கைகளில் ஒன்று எனக் கூறினார். மேலும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உடனான தங்களது நீண்டகால தொடர்பைத் தொடர்ந்து, இந்த அறையை மேம்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும், இது நன்கொடையாளர்கள் வழங்கும் பொருட்களை வைக்கவும், ஏழை எளிய நோயாளிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் உதவும் என்றார். மேலும், கொரோனா பெருந்தொற்றின் போது முன்னால் இருந்து வழிநடத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர் குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.