கிரியில் சாளக்கிராம மற்றும் ஸ்ரீமத் பாகவத கண்காட்சி

0
203

கிரியில் சாளக்கிராம மற்றும் ஸ்ரீமத் பாகவத கண்காட்சி

புனித நாளாகிய ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி தினத்தில், கிரி தனித்துவ மிக்க ஒரு ஆன்மிக நிகழ்ச்சியை நடத்துவதில் பணிவுடன் பெருமைக் கொள்கின்றது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக அடியவர்கள், எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணின் திவ்ய சாளக்கிராம ரூபங்களையும் அவரது திவ்ய சரிதமாகிய ஸ்ரீமத் பாகவதத்தின் மூல ஸ்லோகங்களை ஒருங்கே தரிசிக்கின்ற அருமையான வாய்ப்பு அமையப் பெற்றுள்ளது. ஸ்ரீமத் பாகவதத்தின் 18000 ஸ்லோகங்களை தங்க முலாம் பூசிய தகடுகளில் பொன் எழுத்துகளாக பிரதி எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஜனவரி 10, 11 மற்றும் 12, 2025 ஆகிய தினங்களில், சென்னை அண்ணாநகரில் உள்ள கிரி – இந்து ஷாப்பிங் மாலில், அனைவரும் கண்டு மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தினமும் காலை 09.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெற உள்ளது.

உண்மையான தங்க தகடுகளில் வடிவமைத்த ஸ்ரீமத் பாகவதத்தை மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜன்ம ஸ்தலத்தில் பொதுமக்கள் தரிசனத்திற்கு நிரந்திரமாக வைத்து வழிபடும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து ஆன்மிக அன்பர்கள், பாரம்பரியம் மிக்க நமது மரபில் புனிதமாக போற்றப்படும் சாளக்ராமம் மற்றும் சிவலிங்கங்களின் தெய்வீக ஆற்றலை உணரலாம். மேலும், பக்தி மற்றும் கலைநயத்துடன் வடிவமைக்கபட்டுள்ள இந்த தங்கமுலாம் பூசிய ஸ்ரீமத் பாகவதம் மூலத்தின் பிரதியை இங்கே தரிசிக்கலாம்.

இறைக்காட்சியை காண வரும் இறைஅன்பர்கள் அமைதி, மகிழ்ச்சி, புத்துணர்வு மற்றும் அனைத்து வளங்களையும், இந்த அரங்கின் தூய்மை மற்றும் ஆன்மிக அதிர்வுகள் வாயிலாக, இந்த புத்தாண்டில் பெறுவார்கள் என்று நம்புகிறோம்.

நிகழ்ச்சியைப் பற்றி பேசும்போது, கிரி ட்ரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் திருமதி சாரதா பிரகாஷ் கூறினார்கள்: “இந்த அரிய வாய்ப்பை பக்தர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் . உன்னதமான உயர்ந்த நோக்கமான இறைவழிபாட்டினை அனைத்துத்தரப்பு மக்களிடமும் சேர்ப்பிக்கும் வகையில் இந்த எங்களின் சிறிய முயற்சி உதவும் என்று கருதுகிறோம். இந்த முயற்சியின் நோக்கத்தினை உணர்ந்து அனைவரும் இந்த அரிய இறைநிகழ்வினில் கலந்துகொண்டு, செங்கண் முகத்துச் செல்வதிருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற வேண்டும், என்பதை பிரார்த்தனையாக வைக்கின்றோம்.