ஐபிஎம் கார்பரேஷனின் உள் மறுசீரமைப்பு விரைவு திட்டத்தின் கீழ் கின்டிரில் ஹோல்டிங் எல்எல்சி மற்றும் கிராண்ட் ஓசன் மேனேஜ்ட் இன்ஃபராஸ்டரக்சர் சர்வீஸஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுமதி

0
245

ஐபிஎம் கார்பரேஷனின் உள் மறுசீரமைப்பு விரைவு திட்டத்தின் கீழ் கின்டிரில் ஹோல்டிங் எல்எல்சி மற்றும் கிராண்ட் ஓசன் மேனேஜ்ட் இன்ஃபராஸ்டரக்சர் சர்வீஸஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுமதி

Chennai,

ஐபிஎம் கார்பரேஷன் உள் மறுசீரமைப்பு தொடர்பாக, விரைவு திட்டத்தின்  கீழ் கின்டிரில் ஹோல்டிங் எல்எல்சி மற்றும் கிராண்ட் ஓசன் மேனேஜ்ட் இன்ஃபராஸ்டரக்சர் சர்வீஸஸ் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து இந்திய போட்டிகள் ஆணையம் மனுக்களைப் பெற்றிருந்தது. இதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்டர்நேஷனல் பிஸினஸ் மெசின்ஸ்  கார்பரேஷன் (ஐபிஎம் கார்பரேஷன் /விற்பனையாளர்) தனது உலகளாவிய எம்ஐஸ் பிசினஸ் நிறுவனத்தை, சர்வதேச பெருநிறுவன உள் மறுசீரமைப்பு கட்டமைப்பிற்குள் ஒரு பொது  நிறுவனமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.

எம்ஐஎஸ் பிசினஸ் நிறுவனத்தை பிரித்து  கின்டிரில் ஹோல்டிங் எல்எல்சி (கின்டிரில்)  மற்றும் கிராண்ட் ஓசன் மேனேஜ்ட் இன்ஃபராஸ்டரக்சர் சர்வீஸஸ் (ஓசன் இந்தியா)  என்ற புதிய இணைக்கப்பட்ட நிறுவனங்களாக ஆக்குவதன் மூலம் இந்த இலக்கு கட்டமைப்பை அடைய முடியும்.  இந்தப் பரிவர்த்தன, கூட்டாக கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்களாக குறிப்பிடப்படுகிறது.