எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம் – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

0
273

எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம் – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

இந்திய சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம். இவர் 12 மாடல் அழகிகளை வைத்து 12 விதமான பாரம்பரிய திருமண ஆடைகள் அணிந்து உருவாக்கப்பட்ட தி பிரைட் ஷாப் 2021 ஆண்டிற்கான காலண்டரை சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.

 

அதன்பின் செய்தியாளர்கள் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம், தற்போது கையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் கேமரா மேன் ஆகிவிட்டார்கள். அதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம். அவர்களுடைய திறமையை அவர்களே வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு பெரிய இயக்குனர் 30 வருடங்களுக்கு முன்பு, எப்போது எல்லோருடைய கையில் கேமரா கிடைக்குதோ, அப்போது தான் கலைக்கான மேடையாக ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார். அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. யாருமே எதிர் பார்க்கவில்லை இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று. கலை அடுத்த லெவலுக்கு போகும் என்று நினைக்கிறேன் என்றார்.

இவ்விழாவில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், சபாபதி ராஜரத்தினம்,  யோகேஷ் ஶ்ரீ ரத்னம், ரோஷன் ஶ்ரீ ரத்னம், பிரபல ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர், ஸ்டில்ஸ் ரவி, ஜவகர் அலி, மாடல் அழகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.