சென்னை விமான நிலையத்தில் இருந்து முதன் முறையாக எத்தோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏதோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Lemma Yadecha (Chief Commercial Officer) கலந்துகொண்டு சென்னை முதல் எத்தோபியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகருக்கு முதன்முறையாக விமானசேவையை தொடங்கி வைத்தார்.
இந்த விமான சேவையின் வரலாற்று முக்கியத்துவம் என்னவென்றால், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆப்பிரிக்காவுடன் நேரடி இணைப்பைப் பெறப் போகிறது அடிஸ் அபாபா நகர்
ஆப்பிரிக்காவின் 52 நாடுகளுக்கு நுழைவாயிலாகவும், தென் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கும் மிக விரைவான இணைப்புகளைக் எதோபியா நாடு கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான ஏற்றுமதியாளர்கள் ஆப்பிரிக்கா மற்றும் எத்தோப்பியாவில் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளனர், மேலும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் கல்லூரி படிக்கும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க மாணவர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் நீண்ட நாட்களாக இந்த சேவையை விரும்பி வந்ததால், இந்த விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விமான சேவை நேரம் பின்வருமாறு
*விமான எண்:ET 0692
விமானம் புறப்படும் தேதி :02-Jul-22
அதிர்வு எண்:1.3..6.
விமானம் புறப்படும் இடம்:ADD
விமானம் இறங்கும் இடம்-MAA
விமான எண்:ET 737 – 8
ET 0693
விமானம் புறப்படும் தேதி:02-Jul-22
அதிர்வெண்:1.3.5..
புறப்படும் இடம்:MAA
விமானம் தரை இறங்கும் இடம்:ADD
ET 737-8
விமான நிறுவனத்தை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள முகவரிகள்
Email: CorporateCommunication@
Tel: (251-11)517-8913/165/529/
Web: https://www.ethiopianairlines.
Facebook: https://www.facebook.com/
Twitter: https://twitter.com/
Instagram: https://www.instagram.com/fly.
LinkedIn: https://www.linkedin.com/
Telegram: https://t.me/ethiopian_
YouTube: https://www.youtube.com/c/
சென்னையிலிருந்து அடிஸ் அபாபா நகருக்கு முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள விமான சேவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்
தமிழ்நாட்டில் இருந்து எத்தோப்பியா நாட்டிற்கு தொடங்கப்பட்டுள்ள விமான சேவை குறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள காணொளி வாழ்த்துச் செய்தியில்…
தமிழ்நாட்டில் இருந்து எத்தோப்பியா நாட்டிற்கு வரலாற்று முக்கியத்துவம் விமானசேவை முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த விமான சேவை சென்னையில் இருந்து எத்தோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகருக்கு நேரடி விமான சேவை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது
இந்த விமான சேவை 50க்கும் மேற்பட்ட நாடுகளை இணைக்க கூடியதாக இருக்கிறது. இந்த விமான சேவையை வழங்கிய உள்ள எத்தோப்பியா விமான நிறுவனத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் வரும் காலங்களில் மேலும் பல விமான சேவைகளை நிறுவனம் வழங்கும் என நம்புவதாகவும்
தற்போது தொடங்கப்பட்டுள்ள விமான சேவையின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கல்விக்காகவும்,வேலை தொடங்குவதற்கும், மருத்துவ காரணங்களுக்காகவும் ஆப்பிரிக்க மக்கள் தமிழகத்திற்கு வருகை தருவதற்கு பயனுள்ளதாக இருக்கும்
ஆப்பிரிக்கா நாடு மிகவும் அழகிய நாடு.இதுபோன்ற ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து தமிழகத்திற்கு விமான சேவை வழங்குவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது இந்த முயற்சியை மேற்கொண்ட எதோப்பியா விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
எத்தோபியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் chief Commercial Officer Lemma Yadecha நிகழ்ச்சியில் பேசும்போது
இன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது எத்தியோப்பியா நாட்டிற்கான நான்காவது விமான சேவையை இன்று தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது
எதோபியா நாட்டிலிருந்து இருந்து இந்தியாவிற்கான விமான சேவை கரோனா தொற்றின் காரணமாக விமான சேவை தடைப்பட்டிருந்தது.
தற்பொழுது அந்த நிலை மாறி இந்தியாவில் தங்களது எத்தோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து நான்காவது விமான சேவையை தொடங்கி உள்ளது.
1966 ஆம் ஆண்டு முதன் முறையாக புதுடெல்லியில் இருந்து தொகை நாட்டிற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா மற்றும் எத்தோப்பியா நாட்டிற்கான விமான சேவை 55ஆண்டு காலமாக உள்ளது
ஏதோபியா விமான நிறுவனத்தின் சேவை புதுடெல்லி,மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கொண்டிருக்கிறது இப்போது நான்காவது நகரமாக சென்னையில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவையின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மேலும் தொழில்நிறுவனங்கள் போக்குவரத்திற்கும், கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சரக்கு ஏற்றுமதி இறக்குமதிக்கு மிகவும் உகந்ததாகும் இருக்கும்
தற்போது தொடங்கப்பட்டுள்ள விமான சேவையும் அதிநவீன வசதிகளுடன் கூடிய தேவையாக இருக்கும். சென்னையில் தொடங்கப்பட்டுள்ள விமான சேவை அதிக பயணிகளை ஈர்க்கும் என்று தான் நம்புவதாகவும் தங்களது விமான நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும் பங்குதாரர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.