ஊடக செய்தியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் ஒருமனதாக உள்ளது

0
172

ஊடக செய்தியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் ஒருமனதாக உள்ளது

PIB Chennai,

ஊடக செய்தியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பதில் ஒருமனதாக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுடனான உறவில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு தொடர்பாக சமீபத்தில் கூறப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.  இது தொடர்பாக சில பத்திரிகை செய்திகளையும் தேர்தல் ஆணயைம் பார்த்தது.  எந்த முடிவுகளையும் எடுக்கும் முன்பாக, அது குறித்து தேர்தல் ஆணையம் உரிய ஆலோசனையை எப்போதும் மேற்கொள்கிறது.

உடகங்களின் ஈடுபாட்டை பொருத்தவரை, சுதந்திரமான ஊடகத்தின் மீதான நம்பிக்கையில், உண்மையிலேயே உறுதியாக இருப்பதை தெளிவுபடுத்த தேர்தல் ஆணையம் விரும்புகிறது.

கடந்த காலம் மற்றும் தற்போது நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும்  மற்றும் நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்தியதில் , ஊடகம் ஆக்கப்பூர்வமாக பங்காற்றியதை தேர்தல் ஆணையமும், அதன் உறுப்பினர்களும் அங்கீகரிக்கிறோம். ஊடகங்களின்  செய்தியில் எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் முன்பு தேர்தல் ஆணையம் ஒருமனதாக தெரிவித்தது.

தேர்தல் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்துவது மற்றும்  தேர்தல் நடைமுறையில்  பிரசாரம் முதல் வாக்கு எண்ணிக்கை வரை  வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியது ஆகியவற்றில் ஊடகத்தின் பங்கை தேர்தல் ஆணையம் மிகவும் சிறப்பாக அங்கீகரிக்கிறது. ஊடகத்துடன்  ஒத்துழைப்புடன்  செயல்படுவதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை இயற்கையான நட்புடுன் கூடியது மற்றும் இது மாறாமல் உள்ளது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் சார்பில் இணை செயலாளர் பவன் திவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.