உலக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கல்ப் பியூட்டிபுல் வேர்ல்ட் சார்பாக சைக்கிள் ஓட்டுநர் சிவ ரவி 1600 கி.மீ. பயணம்

0
176
உலக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கல்ப் பியூட்டிபுல் வேர்ல்ட் சார்பாக சைக்கிள் ஓட்டுநர் சிவ ரவி 1600 கி.மீ. , சைக்கிள் ஓட்டுநர் ஜெய் அஸ்வானி 200 கி.மீ. சைக்கிள் பயணத்தை  நிறைவு செய்தனர்.

தீவிர சைக்கிள் ஓட்டுநரான சிவரவி புற்றுநோயாளிகளுக்கு ஆதரவாக சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் அதனைத் தொடர்ந்து மீண்டும் சென்னைக்கு என 1600 கி.மீ. தூரம் பயணம் செய்தார்.

சைக்கிள் சவாரி ஒரு நாளைக்கு 200 கிமீ தூரம் கடந்து சென்று நெல்லூர், விஜயவாடா, காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் வழியாக அவரது சைக்கிள் பயணம் இருந்தது.

புற்றுநோயாளிகளுக்கு ஆதரவாக சைக்கிள் ஓட்டுநரான ஜெய் அஸ்வானி பிப்ரவரி 11 அன்று நெல்லூரில் இருந்து  சென்னைக்கு 200 கி.மீ. தூரம் பயணம் செய்தார்.

புற்றுநோய் தினத்தையொட்டி, சென்னையைச் சேர்ந்த சங்கல்ப் பியூட்டிஃபுல் வேர்ல்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும், அல்ட்ரா-எண்டூரன்ஸ் சைக்கிள் ஓட்டுநரான சிவ ரவியும், புற்றுநோயாளிகளுக்கு ஆதரவாக உன்னத பணியை மேற்கொண்டனர்.

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோய்க்கான நிதி திரட்டவும், புற்றுநோயை எதிர்த்துப் போராட மக்களை ஊக்கப்படுத்தவும்,சிவரவி சென்னையில் இருந்து விசாகப்பட்டினம்  மற்றும் சென்னைக்கு என பிப்ரவரி 04 முதல் பிப்ரவரி 11 வரை 1600 கி.மீ.களை கடந்து சென்னை திரும்பினார்.

சிவ ரவியை சங்கல்ப் பியூட்டிஃபுல் வேர்ல்ட் இயக்குனர் டாக்டர் வந்தனா மகாஜன், டெக்ஸ்டான் பயோ சயின்ஸ் தலைவர் கிருஷ்ணமாச்சாரி, சேவ் சக்தி அறக்கட்டளையின் இணை நிறுவனர் திருமதி சாயா தேவி, டாக்டர் ஏ.இ. ஜெகதீசன் டிஎஸ்பி (ஓய்வு) மற்றும் அரசு விவகாரங்கள், எம்.எம்.அசோக்குமார் (போக்குவரத்து துணை ஆணையர்), சுரேஷ் (சப் இன்ஸ்பெக்டர்), நீரஜ் மாலிக், திவ்யா, கவுதம் சந்தர் (சங்கல்ப் பியூட்டிபுல் வேர்ல்ட்), டாக்டர் சந்தோஷ் ஆலோசகர் சங்கல்ப் பியூட்டிபுல் வேர்ல்ட் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
சிவ ரவியை வரவேற்றுப் பேசிய டாக்டர் வந்தனா மகாஜன், பொது மக்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் அதேபோல் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங்கை விரிவுபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சிவ ரவி, நாம் அனைவரும் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டும்.மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் புற்றுநோய்க்கு எதிராக போராட வேண்டும். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும், இதை வெற்றிகரமாக முறியடித்தவர்களை நான் அறிவேன். மேலும் எனது பாட்டி 17 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் இறந்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக, இது மிகவும் தாமதமான கட்டத்தில் கண்டறியப்பட்டது மற்றும் சிகிச்சை விருப்பங்களும் அப்போது கணிசமாக குறைவாகவே இருந்தன. சிறிய அளவில் விழிப்புணர்வையும் ஆதரவையும் ஏற்படுத்த இந்த உன்னதமான காரியத்தில் இறங்கி உள்ளேன் என கூறினார்.