உலக ஐ.வி.எஃப். தினத்தை முன்னிட்டு, ‘ஆன்ட்ரோலைப்’ என்னும் ஆண்களுக்கான பிரத்யேகக் கருத்தரிப்பு மையத்தை சென்னையில் திறந்தது, ஒயாசிஸ் கருத்தரிப்பு மையம்!

0
275

உலக ஐ.வி.ப். தினத்தை முன்னிட்டு, ஆன்ட்ரோலைப்’ என்னும் ஆண்களுக்கான பிரத்யேகக் கருத்தரிப்பு மையத்தை சென்னையில் திறந்தது, ஒயாசிஸ் கருத்தரிப்பு மையம்!

சென்னை, கருவுறாத தன்மை என்று வரும்போது பொதுவாக நாம் மற்றொரு தரப்பு குறித்து சிந்திப்பதே இல்லை. பெண்களுக்கு கருவுறாத தன்மை ஏற்படுவதைப் போல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த உண்மையை இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆண்களிடையே மலட்டுத் தன்மை ஏற்படுவது அதிகரித்து வரும் இவ்வேளையில், மிகச் சிலரே சமூகத்தில் நிலவும் பழமையான கருத்துகளை மீறி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள முன்வருகின்றனர்.

உலக ஐ.வி.எஃப். தினத்தை (World IVF Day) முன்னிட்டு, சென்னையில் உள்ள ஒயாசிஸ் கருத்தரிப்பு மையம் (Oasis Fertility Centre) ஆன்ட்ரோலைப் (AndroLife) என்னும் ஆண்களுக்கான பிரத்யேகக் கருத்தரிப்பு கிளினிக்கை தொடங்கியுள்ளது. ஒயாசிஸ் கருத்தரிப்பு மையத்தைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் மற்றும் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் அபர்ணா விஷ்வாகிரண் (Dr Aparna Vishwakiran), கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் டி. மகேஸ்வரி (Dr D. Maheshwari), ஆணினவியல் ஆலோசகர் டாக்டர் சி. தேவ் கிருஷ்ணா (Dr C. Dev Krishna) ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

இது குறித்து ஒயாசிஸ் கருத்தரிப்பு மையத்தின் மூத்த ஆலோசகர் மற்றும் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் அபர்ணா விஷ்மாகிரண் கூறுகையில், “ஆண்களுக்கென பிரத்யேகமாக ஆண்ட்ரோலைப் சிகிச்சை மையத்தைத் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பெரும்பாலான ஆண்கள் தங்களின் கரு குறித்த மதிப்பீட்டைச் செய்ய முன்வருவதில்லை. இது தொடர்பாக சமூக ரீதியில் காணப்படும் பழக்க வழக்கங்களும், போதிய புரிதல் இல்லாததுமே இதற்கு முக்கியக் காரணங்களாகும்.  சர்வதே ஐ.வி.எஃப். தினத்தை முன்னிட்டு சிறப்பு முயற்சியாக ‘கருத்தரிப்பு பரிசோதனைக்கு பாலின பேதம் கிடையாது’ என்பதை உணர்த்தும் விதமாக ஆண்களுக்கென பிரத்யேக சோதனை மையத்தைத் தொடங்கியுள்ளோம். அதாவது திருமணமாகி ஓராண்டாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றால் கணவன், மனைவி இருவரும் கருத்தரிப்பு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம்” என்றார்.

இம்மையத்தின் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் டிமகேஸ்வரி பேசுகையில்,  “குழந்தை பிறக்காத விஷயம் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை; ஆண்களையும் பாதிக்கக்கூடும். ஆண் மலட்டுத் தன்மைக்கு உடல் பருமன், போதிய உடற்பயிற்சி இல்லாதது, மாசு, முரண்பட்ட வாழ்வியல் முறை, அதீத வெப்பம் மற்றும் அபாயகரமான ரசாயனஙகளைக் கையாள்வது, அதிக நேரம் மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்துவது, குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவது போன்ற பல காரணங்கள் உள்ளன. ஆண்களுக்கு பல வகையிலான சிகிச்சை முறைகள் தற்போது இருக்கின்றன. குறைவாக உயிர் அணுக்கள் உள்ள ஆண்களுக்கு சிகிச்சை மூலம் அதை அதிகரிக்கச் செய்து தந்தையாக்கும் நிலையை எட்டச் செய்கிறோம். கரு பாதுகாப்பு தொழில்நுட்பம் மூலம் புற்று நோயாளியாக உள்ள ஆண், புற்றுநோய் சிகிச்சைக்கு முன்பு அவரது விந்தணுவை பாதுகாத்து எதிர்காலத்தில் குழந்தை பாக்கியம் பெறவும் உதவுகிறோம்’’ என்றார்.

இந்த மையத்தின் கன்சல்டன்ட் ஆன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் சி. தேவ் கிருஷ்ணா கூறுகையில், “சர்வதேச அளவில் 30 வயதுக்கு குறைவான ஆண்களுக்கு கரு வாய்ப்பு 15 சதவீதம் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணமாக நாங்கள் பார்த்தவரை ஆண்களுக்கு பிறரிடமிருந்து அன்பு கிடைப்பதும், அவர்கள் தங்கள் மீது கவனம் செலுத்துவதும் குறைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே ஆண்ட்ரோலைப் மையம் ஆண்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. மைக்ரோ-டி.இ.எஸ்.இ. (Micro-TESE) மூலம் விந்தணுவை எடுத்து பரிசோதிக்கும் முறை எங்கள் மையத்தில் உள்ளது. இத்தகைய வசதி மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மையங்களில் மட்டுமே உள்ளன. மேம்பட்ட எம்.ஏ.சி.எஸ். (MACS), பி-ஐ.சி.எஸ்.ஐ. (P-ICSI), ஐ.எம்.எஸ்.ஐ. (IMSI), மைக்ரோபுளூயிடிக்ஸ் (Microfluidics) உள்ளிட்ட சிகிச்சை வசதிகள் மூலம் ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அவர்களது பெற்றோராகும் கனவு நிறைவேற உதவுகிறோம். இந்த விஷயத்தில் மறுப்பது அல்லது கால தாமதப்படுத்துவதை விட ஆணினவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் சிறந்தது” என்று குறிப்பிட்டார்.