இந்தோ – அஸ்திரேலியன் அசோசியேஷனின் சிறந்த சேவைக்கான விருதினை ஆற்காடு நவாப் முஹம்மத் அப்துல் அலிக்கு அந்த அமைப்பின் தலைவர் சூசன் வர்கீஸ் முன்னிலையில் தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய கன்சல் ஜெனரல்  சாரா கிர்லிவ் வழங்கினார்

0
138
இந்தோ – அஸ்திரேலியன் அசோசியேஷனின் சிறந்த சேவைக்கான விருதினை ஆற்காடு நவாப் முஹம்மத் அப்துல் அலிக்கு அந்த அமைப்பின் தலைவர் சூசன் வர்கீஸ் முன்னிலையில் தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய கன்சல் ஜெனரல்  சாரா கிர்லிவ் வழங்கினார். 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  ஆற்காடு நவாப் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும், சர்வதேச உறவுகளை ஆதரிப்பதற்கும் நீண்டகாலமாக சேவையாற்றி வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சூசன் வர்கீஸ், தகுதி வாய்ந்த நபருக்கு இந்த விருது வழங்கப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய கன்சல் ஜெனரல்  சாரா கிர்லிவ் உரையாற்றும் போது, வரலாற்று சிறப்பு மிக்க அமீர் மஹாலில் இந்த நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்காடு நவாப் முஹம்மத் அப்துல் அலிக்கு வழங்கியது மிகவும்  மகிழ்ச்சி என்றார். நீண்ட நெடிய இந்திய ஆஸ்திரேலிய உறவுக்கு ஆற்காடு நவாப் குடும்பத்தினரின் பங்களிப்பு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு தேசிய கீதங்கள்  பாடப்பட்டு இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது