இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

0
466
Dr. Arun Kumar Bhaduri, Director, IGCAR addressing the online meeting to transfer IGCAR’s Conductivity Meter Technology to M/s Serve XL Enterprises, Bengaluru on 29.April.2021

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

“பல்சேட்டிங் உணர்திறன் சாதனம் அடிப்படையிலான மின் கடத்துத்திறன் மீட்டர்” எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் குழுமம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) கல்பாக்கத்தில் “ஆத்ம நிர்பர் பாரத்” திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு பகுப்பாய்வு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கான வேதியியல் ஆய்வகங்களில் மட்டும் அல்லாது, இது நீர்நிலைக் கரைசலின் மின் கடத்துத்திறனின் நிகழ்நேர கண்காணிப்புக்கு தொழில்துறை மற்றும் கள பயன்பாடுகளில் பொருத்தமானது. இந்த சாதனத்தின் செயல்திறன் IGCAR இல் உள்ள பல பயன்பாடுகளில் சரிபார்க்கப்பட்டது. கடுமையான சூழல்களில் கூட நன்கு செயல்படும் திறன் வாய்ந்தது.

ALSO READ:

Indira Gandhi Centre for Atomic Research

இந்த தொழில்நுட்பத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) 29.April.2021 அன்று பெங்களூரில் உள்ள சர்வ் எக்ஸ்எல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு பகிர்ந்தது. இன்குபேஷன் சென்டர்-IGCAR இந்நிறுவனத்துடன் ஏற்பாடு செய்த ஆன்லைன் சந்திப்பில், அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் அருண்குமார் பாதுரி, தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை சர்வ் எக்ஸ்எல் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் திரு விக்ரம் படாக்கிக்கு வழங்கினார். சந்திப்பில் டாக்டர். பி. வெங்கட்ராமன், இயக்குநர் SQRMG (IGCAR), திரு. ௭ஸ். ரகுபதி, இயக்குநர் EIG (IGCAR), டாக்டர் என். சுப்பிரமணியன், தலைவர், இன்குபேஷன் சென்டர்-IGCAR, திரு. ஜி பிரபாகரராவ், தலைவர், SISD (IGCAR) மற்றும் பிற மூத்த வி்ஞ்ஞானிகளும், சர்வ் எக்ஸ்எல் நிறுவனத்தை சார்ந்தவர்களும் கலந்துக்கொண்டனர்.

இந்திய அரசின் “ஆத்ம நிர்பர் பாரத்” திட்டத்தின் ஓர் ௮ம்சமாக ௮ணுசக்தி துறையால் இன்குபேஷன் சென்டர்-IGCAR சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இன்குபேஷன் பற்றிய கூடுதல் தகவலுக்கு “[email protected]” என்கின்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.