இந்தியா – அமெரிக்கா இடையிலான 11-வது ராணுவ தொழில்நுட்பம்  & வர்த்தக முன்முயற்சிக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது 

0
115

இந்தியா – அமெரிக்கா இடையிலான 11-வது ராணுவ தொழில்நுட்பம்  வர்த்தக முன்முயற்சிக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது 

புதுதில்லிநவம்பர் 10, 2021

முக்கிய சாராம்சங்கள்:

  • ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கான, திருத்தப்பட்ட அறிக்கையை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன
  • கடந்த கூட்டத்திற்குப் பிறகு கையெழுத்தான வான் சாதன கூட்டு நடவடிக்கைக் குழு முடிவுகளின் அடிப்படையில், ஆளில்லா விமான சாதனங்கள் தயாரிப்புக்கான முதல் திட்ட ஒப்பந்தம்
  • முக்கிய தொழில்நுட்பங்கள் உருவாக்குவதை மேலும் ஊக்குவிக்க, ராணுவ தளவாட தொழில் ஒத்துழைப்பு கண்காட்சி காணொலி வாயிலாக நடத்தப்பட்டது
  • ராணுவ தளவாடங்களை இணைந்து தயாரித்தல் & இணைந்து உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதே, ராணுவ தொழில்நுட்பம்  & வர்த்தக முன்முயற்சிக் குழுவின் நோக்கம்

இந்தியா – அமெரிக்கா இடையிலான 11-வது ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சிக் குழுவின் கூட்டம், காணொலி வாயிலாக நவம்பர் 9, 2021 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் (ராணுவ தளவாட உற்பத்தி) திரு.ராஜ்குமார் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ராணுவ தளவாட கொள்முதல் பிரிவு துணைச் செயலாளர் திரு.க்ரிகோரி கவுஸ்னர் ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர்.

இந்தக் குழுவின் கூட்டம், ஆண்டுக்கு இருமுறை, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம். எனினும், கொவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக இக்கூட்டம் தொடர்ந்து 2-வது முறையாக காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டுள்ளது.