இந்தியாவின் பொறியியல் நேர்த்தி மற்றும் புத்தாக்கத்தை காட்சிப்படுத்தும் ஹெக்ஸகன்  உற்பத்தி நுண்ணறிவு பயனாளிகள் கருத்தரங்கு இந்தியா 2023

0
147

இந்தியாவின் பொறியியல் நேர்த்தி மற்றும் புத்தாக்கத்தை காட்சிப்படுத்தும்
ஹெக்ஸகன்  உற்பத்தி நுண்ணறிவு பயனாளிகள் கருத்தரங்கு இந்தியா 2023

  • சென்னை ஐடிசி சோழாவில் நடத்தப்படும் இந்த இருநாள் நிகழ்வில் ஆட்டோமோட்டிவ், ஏரோஸ்பேஸ், உற்பத்தி, கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்துறை பிரிவுகளின் நிபுணர்கள் பங்கேற்கின்றனர்
  • உற்பத்தி நுண்ணறிவில் (manufacturing intelligence) கட்டமைப்புகள், மூலப்பொருட்கள், தரம் மற்றும் செயல்முறைகளை முதல் நாள் கருத்தரங்கு ஆய்வு செய்கிறது.
  • தொழில்துறையின், உள்நோக்குகள், புத்தாக்கங்கள் மற்றும் கூட்டு உற்பத்தி செயல்பாட்டினை 2-வது நாள் கருத்தரங்கு ஆய்வு செய்கிறது.
  • திரு. மகேஷ் கைலாசம், அலெக்ஸாண்டர் ஃப்ராய்ண்ட் மற்றும் ஸ்டீஃபன் கிரஹாம் போன்ற பிரபல ஹெக்ஸகன்  பேச்சாளர்கள் உட்பட பலரும் தங்களது நிபுணத்துவமான உள்நோக்குகளையும், இத்தொழில்துறைக்கான தீர்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
  • அசோக் லேலண்டு, ஸ்டெல்லான்டிஸ், ஐஐடி சென்னை மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களும் இந்நிகழ்வில் உரையாற்றுகின்றனர்.
  • பல்வேறு பிரிவுகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மீது இந்த தொழிலகங்களில் மேற்கொள்ளப்படும் நவீன பணி செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்ற 110-க்கும் அதிகமான தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள் இந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

 சென்னை: அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்ற ஹெக்ஸகன்  உற்பத்தி நுண்ணறிவு பயனாளிகள் கருத்தரங்கு இந்தியா 2023 (Hexagon Manufacturing Intelligence User Conference India 2023) , சென்னை ஐடிசி கிராண்டு சோழா வளாகத்தில் தற்போது நடைபெறுகிறது.  இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்திய உற்பத்தி தொழில்துறைக்கான ஹெக்ஸகனின் வருடாந்திர கருத்தரங்கு நேரடி பங்கேற்பு நிகழ்வாக இந்த ஆண்டு நடைபெறுகிறது.  கருத்தரங்கின் நாள் 1 மற்றும் 1000-க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்கின்றனர்.  பொறியியல் மற்றும் உற்பத்தி தொழில் சமூகத்தைச் சேர்ந்த இத்துறையின் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையாளர்கள் என பலரையும் இக்கருத்தரங்கு நிகழ்வு  ஒருங்கிணைக்கிறது.

“பொறியியல் தரம்: கருத்தாக்கத்திலிருந்து வாடிக்கையாளருக்கு” என்பது, இந்த ஆண்டு கருத்தரங்கின் கருப்பொருளாகும்.  வெற்றியையும், புத்தாக்கத்தையும் முன்னெடுப்பதில் தரத்தின் முக்கியத்துவம் மீது இக்கருத்தரங்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.  வலுவான தர அமைப்புகளும், செயல்முறைகளும் பிசினஸ் நடைமுறைகளை மேலும் சிறப்பாக்குகின்றன, தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஏதுவாக்குகின்றன மற்றும் ஸ்மார்ட்டான உற்பத்தியை சாத்தியமாக்குகின்றன என்பதை ஹெக்ஸகன் புரிந்து கொள்கிறது.  தரத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நிகரற்ற நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை வெளிப்படுத்துகிறது. தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதற்கு உதவுவதில், வாடிக்கையாளரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சுவது ஹெக்ஸகனின் நோக்கமாகும்.  உற்பத்தி சூழலமைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் தர கலாச்சாரம் ஆழமாக வேரூன்றி இருப்பதற்கான அவசியம் இருக்கிறது என்று   இந்நிறுவனம் நம்புகிறது.  உற்பத்தி செயல்பாட்டில் உலகின் அடுத்த தலைநகராக வளர்ச்சிகாண இந்தியா சிறப்பாக முன்னேறி கொண்டிருக்கும் நிலையில் தரம் மீது கூர்நோக்கம் செலுத்தும் கலாச்சாரம், அந்த இடத்தை சென்றடையும் செயல்முறையை இன்னும் துரிதமாக்கும்.

ஹெக்ஸகன்  உற்பத்தி நுண்ணறிவு பயனாளிகள் கருத்தரங்கு இந்தியா 2023 – ல் சிறப்புரை ஆற்றவிருக்கும் பேச்சாளர்களுள் திரு. மகேஷ் கைலாசம் SVP & GM, வடிவமைப்பு & பொறியியல்; அலெக்ஸாண்டர் ஃபிராய்ன்டு, இயக்குனர், உற்பத்தி மென்பொருள்; சோம் சக்கரபூர்த்தி, குளோபல் டைரக்டர் – அளவீட்டியல் & தரஉத்தரவாத மென்பொருள்; பூன் சூன் லிம், தலைவர் – ஹெக்ஸகன் மேனுஃபேக்சரிங் இன்டெலிஜென்ஸ் டிவிஷன் – கொரியா, ஏசியன் பசிஃபிக் & இந்தியா; மற்றும் ஸ்டீஃபன் கிரஹாம், EVP & ஜிஎம், நெக்ஸஸ் – ன் ஹெக்ஸகன் மேனுபேஃக்சரிங் இன்டெலிஜன்ஸ் டிவிஷன், டாக்டர். கே. சுப்ரமணியன், முதுநிலை துறை தலைவர் அசோக் லேலண்டு; முரளி பாலசுப்ரமணியன், ஆட்டோமோட்டிவ் ரீசர்ச் & அட்வான்ஸ் இன்ஜினியரிங், இந்தியா ஹெட், ஸ்டெலான்டிஸ்; மகேஷ் V P, டீன் ஐஐடி, சென்னை ; டாக்டர். சூர்யநாராயண பிரசாத் AN, தலைவர் – சிமுலேஷன் மற்றும் அனலடிக்ஸ், அசோக் லேலண்டு; ஸ்ரீதர் லிங்கன், முதுநிலை முதன்மை பொறியாளர் – CAE (கிராஷ் & ஆக்குபன்ட்) CFD & மெத்தட்ஸ் டெவலப்மென்ட், மஹிந்திரா ஆகியோரும் உள்ளடங்குவர்.

“பொறியியல் மேன்மை நிலையை எட்டுவதென்பது, தொடர்ந்து நடைபெறும் ஒரு பயணம் ; இதற்கு ஆழமான புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தொடர்ச்சியான தன்முனைப்புள்ள அணுகுமுறை ஆகியவை தேவைப்படுகிறது.  தரம், தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளரை மையமாக கொண்ட தீர்வுகளுக்கிடையே நிலவும் உயிரோட்டமான இடைவினை செயல்பாட்டை கண்டறியவும், மேம்படுத்தவும்  உலகெங்கிலும் தொழில்துறை தலைவர்கள் ஒன்றுகூடும் ஒரு தளமாக ஹெக்ஸகன்  உற்பத்தி நுண்ணறிவு பயனாளிகள் கருத்தரங்கு இந்தியா 2023 திகழ்கிறது என்று ஹெக்ஸகன் – ன் உற்பத்தி நுண்ணறிவு துறையின் இந்தியாவிற்கான செயலாக்க தலைவர் திரு. ஸ்ரீதர் தர்மராஜன் கூறுகிறார்.”

தரம், கட்டமைப்புகள், பொருட்கள், செயல்முறைகள் ஆகியவை தொடர்பாக ஹெக்ஸகன் – ன் புராடக்ட் பயனாளிகள், அவர்களது சிறப்பான அனுபவத்தை இக்கருத்தரங்கின் பங்கேற்பாளர்களோடு பகிர்ந்து கொள்வதால்,  கருத்தரங்கின் நாள் 1 (செப்டம்பர் 5, 2023) நிகழ்வானது, கலந்துரையாடலும், உற்சாகமான ஆற்றலும், பதில்வினையும் இணைந்ததாக இருந்தது திரு. ஸ்ரீதர் தர்மராஜன் ஆற்றிய வரவேற்புரையை தொடர்ந்து, ஹெக்ஸகன் மேனுஃபேக்சரிங் இன்டெலிஜென்ஸ் – ன் தலைவர் – KAI, திரு. பூன் சூன் லிம் உரையாற்றுகிறார்.  ஆட்டோமொபைல் தொடர்பான கட்டமைப்புகள் மற்றும் மூலப்பொருட்கள், தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள் மற்றும் போக்கு குறித்த பகுப்பாய்வு ஆகியவை இவர் ஆய்வு செய்யும் தலைப்புகளுள் சிலவாகும்.  தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்ற இத்துறையின் போக்கு பகுப்பாய்வு கலந்துரையாடல்களிலும் கருத்தரங்கின் பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள்.  தொழில்துறை நிபுணத்துவம் மற்றும் ஒத்துழைப்பு உணர்வு மீதான இந்த நாளின் கூர்நோக்கம், மேலதிக ஆய்விற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.  சிறப்பு பிரிவுகள் மீது கவனம் செலுத்துகிறவாறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மீது கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படும் அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள் இதை நேர்த்தியாக வெளிப்படுத்துகின்றன.

கருத்தரங்கின் நாள் 2 – (செப்டம்பர் 6, 2023) கூட்டு (அடிட்டிவ்) உற்பத்தி மீதான கலந்துரையாடல்கள், சிறப்புரைகள், தொழில்துறையின் உள்நோக்குகள், கட்டமைப்புகள், பொருட்கள் மற்றும் செயல்முறைகளின் முன்னோடித்துவமான தீர்வுகள் ஆகியவை மீது சிறப்பு கவனம் செலுத்தும்.  ஸ்டெலான்டிஸ் நிறுவனத்தின் திரு. முரளி பாலசுப்ரமணியன் வழங்கும் சிறப்புரை, வர்த்தக வாகனங்களில் மேம்படுத்தப்பட்ட ஓட்டுனர் உதவி அமைப்பு (ADAS) மீது ஆய்வு ஆகியவை குறிப்பிடத்தக்க அமர்வுகளாக இருக்கும்.  செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தி சிறப்பாக்குதல், ஒப்புருவாக்கம் மற்றும் முன்கணிப்பு செயல்பாடு ஆகியவை இந்நாளில் நடைபெறவிருக்கும் பிற அமர்வுகளாகும்.  அதைத் தொடர்ந்து விருதுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் கருத்தரங்கின் முடிவுரை ஆகியவற்றோடு இந்நிகழ்வு நிறைவடையும்.

இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஹெக்ஸகன் வழங்கும் நவீன டிஜிட்டல் ரியாலிட்டி செயல்தளமான நெக்ஸஸ் (Nexus) என்பதன் மேலோட்டப் பார்வையை பெறும் வாய்ப்பையும் இக்கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பெறுவார்கள்.  இந்த புரட்சிகரமான திறந்தநிலை கிளவுட் செயல்தளமானது, தரவு அணுகுவசதியையும், நிகழ்நேர ஒத்துழைப்பையும், பொறியியல் மற்றும் உற்பத்தி பிரிவுகளுக்கிடையில் பின்னூட்டத் தகவலையும் சாத்தியமாக்கும்; இதற்கு முன்பு எட்ட முடியாத நிலையிலிருந்த இடைவினை செயல்பாட்டு அளவோடு குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதையும் ஏதுவாக்கும்.

மைக்ரோசாஃப்ட் இணைந்து உருவாக்கப்பட்ட நெக்ஸஸ்,  நவீன கிளவுட் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது; புராடக்ட் – ன் ஆயுள் சுழற்சி முழுவதும் தரவுகளை எளிதாக, சிறப்பாக பயன்படுத்த பொறியியலாளர்களுக்கு திறனதிகாரத்தை வழங்குகிறது.  நிகழ் நேரத்திலேயே உள்நோக்குகளை அணுகி பெறும் வசதி, முடிவெடுத்தல், பிரச்சனைக்கு தீர்வுகாணல் ஆகியவற்றை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் உரிய நேரத்திற்குள் சந்தைக்கு பொருட்களை தயாரித்து அனுப்புதல் ஆகிய பிற அம்சங்களினால் இதுவொரு மேம்பட்ட மாற்றமாக இருக்கும்.  அளவீட்டியல் தகவலளிப்பு, அளவீட்டியல் சொத்து மேலாளர், மெட்டீரியல்ஸ் இணைப்பு, மெட்டீரியல்ஸ் செழுமையாக்கல், 3D ஒயிட்போர்டு, கூட்டு உற்பத்திக்கான வடிவமைப்பு மற்றும் இணைக்கப்பட்டுள்ள பணியாளர் போன்ற நிலைமாற்றத்திற்குரிய தீர்வுகளை நெக்ஸஸ் அறிமுகமாகிறது.  தரம் மற்றும் மேன்மை நிலையை பூர்த்தி செய்யும்.  அதே நேரத்தில், புத்தாக்கத்தை முன்னெடுப்பதற்காக ஹெக்ஸகன் – ன் சூழலமைப்பு தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

ஹெக்ஸகன் – ல் நெக்ஸஸ் -க்கான செயலாக்க துணை தலைவர் மற்றும் பொது மேலாளர் திரு. ஸ்டீபன் கிரஹாம் கூறியதாவது: “நெக்ஸஸ் அறிமுகத்தின் மூலம் நம்மை இணைத்திருக்கின்ற டிஜிட்டல் இணைப்புடன் புத்தாக்கம் செழித்து வளர்கின்ற ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்காலத்திற்குள் நாங்கள் கால் பதிக்கிறோம்.  ஒத்துழைப்புள்ள இணக்கநிலைக்கான ஹெக்ஸகன் – ன் தீர்வே நெக்ஸஸ்.  வரம்புகளை கடப்பதற்கு உற்பத்தி செயல்முறைகளுக்கு திறனதிகாரம் வழங்கும் வகையில் நெக்ஸஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  உற்பத்தி செயற்பிரிவை மேம்படுத்தி மறுவடிவமைப்பு செய்வதில் எமது அர்ப்பணிப்பிற்கான ஒரு சாட்சியமாக நெக்ஸஸ் செயல்தளம் திகழ்கிறது.”

“அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் நாங்கள் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களுள் ஒன்றே நெக்ஸஸ்; பொறியியல் புத்தாக்கங்களை முன்னெடுப்பதற்கு எமது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் பொறுப்புறுதிக்கு இது எடுத்துக்காட்டாக இருக்கிறது.” என்று திரு. ஸ்ரீதர் தர்மராஜன் மேலும் கூறினார்.

இக்கருத்தரங்கு பற்றி மேலும் அறிய மற்றும் அதிக தகவலைப் பெற இங்கு here க்ளிக் செய்யவும்.