‘அப்போலோ ஷைன்’ மாணவர்களின் உடல்நல ஆரோக்கியம் மற்றும் அவசரகாலத்தை எதிர்கொள்ளும் தயார்நிலை மீதான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
- மாணவர் உடல்நல ஆரோக்கியத்திற்கான தூதர்களின் புதிய சகாப்தத்தை கொண்டாடும் வகையில் அப்போலோ ஷைன் முன்முயற்சி அமைந்திருக்கிறது.
- அவசர காலங்களில் எதிர்கொள்ளும் மருத்துவ சூழலை எதிர்கொள்ள உதவும் வகையில் ஆம்புலன்ஸ்ஸ் குறித்து தெரிந்து கொள்வதற்கான செயல் முறை விளக்கமாக ஆம்புலன்ஸ் டூர் மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கு உதவ எந்தவகையில், எப்படி செயல்படுவது என்பது குறித்த பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை, அப்போலோ மருத்துவமனைகள், தனது லாப நோக்கமற்ற தன்னார்வ முன்முயற்சியான ’அப்போலோ ஷைன்’ [Apollo SHINE] மூலம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உடல்நல ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் தொடர்ந்து முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ’அப்போலோ ஷைன்’ அமைப்பு நவம்பர் 7, 2024 அன்று “பள்ளிகளில் அவசரகாலத்தை எதிர்கொள்ளும் தயார்நிலை” [“Emergency Preparedness in Schools”] என்ற தலைப்பில் ஒரு மாபெரும் சிறப்பு நிகழ்வை நடத்தியிருக்கிறது. இந்நிகழ்வின் மூலம் பள்ளிகள் அவசர கால நடவடிக்கைகளை, மருத்துவ அவசர நிலையை எப்படி கையாள்வது என்பது குறித்தும், மாணவர்கள் இது மாதிரியான சூழல்களை எதிர்கொள்ள அவசியமான உடல் ஆரோக்கியம் குறித்த அறிவை வழங்குவதையும் நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
2015-ம் ஆண்டு அப்போலோ ஷைன் [Apollo SHINE] அமைப்பானது தொடங்கப்பட்டதிலிருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வளாகங்களில் உடல் நல ஆரோக்கியத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. தனது தொடர்ச்சியான முன்முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் டெல்லி/என்.சி.ஆர் ஆகிய மாநிலங்களில் உள்ள 175 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விதத்தில் சென்றடைந்து இருக்கிறது. டாக்டர். பிரதாப் சி. ரெட்டி அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு வரும் அப்போலோ ஷைன், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் உடல்நல ஆரோக்கிய திட்டங்களை வழங்குவதன் மூலம், தொற்று அல்லாத நோய்களினால் (NCDs) நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுமையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அப்போலோ ஷைன் அறக்கட்டளையின் மருத்துவ இயக்குநர் டாக்டர். இந்திரா ஜெயக்குமார் [Dr. Indira Jayakumar, Medical Director, Apollo SHINE Foundation] இந்நிகழ்வு குறித்து பேசுகையில், பள்ளிகளில் எதிர்பாராமல் நிகழும் அவசரகால மருத்துவ சூழலை எதிர்கொள்வதற்கான தயார்நிலையின் முக்கிய அம்சங்களைப் பற்றியும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பள்ளிகளில் எதிர்கொள்ளும் பல்வேறு அவசரநிலைகளை எவ்வாறு திறமையாகக் கையாளலாம் என்பது குறித்து தனது கருத்துதகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் கூறுகையில், “மருத்துவ அவசரநிலைகளில், நேரம் என்பது ஒரு விலைமதிப்பற்ற முக்கிய அம்சமாக இருக்கிறது. அவசர சூழலில் அதன் ஆரம்பகட்ட நிமிடங்கள் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்” என்றார். மேலும் அவர் தொடர்கையில், அவசரகால மருத்துவ சிகிச்சைகளில் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களுடன், அவசியமான வசதிகளைக் கொண்டிருக்கும் மருத்துவ அறையை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். பள்ளிகளில் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவங்களையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் கூறியதோடு, சரியான நேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டிய அப்போலோ ஷைன் செவிலியர்களின் பங்களிப்பின் மூலம் ஏற்பட்ட நேர்மறையான வித்தியாசத்தை அடிக்கோடிட்டு காட்டினார். இதையடுத்து அப்போலோ ஷைன் பள்ளி செவிலியர் குழு சார்பாக 15 செவிலியர்கள் தங்களது பங்களிப்பிற்காக கெளரவித்து பாராட்டப்பட்டனர்.
5-கட்ட அவசர நடவடிக்கை வழிகாட்டி கையேடு மற்றும் அதனுடன் மருத்துவ அறை, ஆம்புலன்ஸ் அழைத்து செல்லுமிடம் ஆகியவற்றைக் குறிக்கும் அனைத்துப் பள்ளிகளுக்கான அவசரகால வரைபடமும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த வரைப்படம் கொண்ட கையேடு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக பின்பற்றினால் நல்ல பலன்களை அளிக்கும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வில் அப்போலோ ஷைன் மாணவர் உடல்நல ஆரோக்கியத்திற்கான தூதர் திட்டத்தின் [Apollo Shine Student Health Ambassador program] அதிகாரப்பூர்வ அறிமுகமும் இடம்பெற்றது. அப்போலோ ஷைன் மாணவர் உடல்நல ஆரோக்கியத்திற்கான தூதர் திட்டமானது, அவர்களது சக மாணவர்களிடையே உடல்நல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவசரகாலங்களில் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தயாராவது குறித்த நடவடிக்கைகளையும் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நிகழ்வின் ஒரு பகுதியாக, இதில் பங்கேற்றவர்கள் அங்கிருந்த பல்வேறு வகையான அப்போலோ 1066 ஆம்புலன்ஸ்களை சுற்றிப்பார்த்து அவற்றில் இடம்பெற்றிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி தெரிந்து கொண்டனர். இது சில சிக்கலான சூழ்நிலைகளைக் கையாள்வதில் அவர்கள் தங்களைத் தயார்படுத்த பெரும் உதவியாக அமைந்திருந்தது.
அப்போலோ ஷைன் அறக்கட்டளையின் இயக்குனர் கிஷோர் மனோகர் [Kishore Manohar, Director, Apollo Shine Foundation] கூறுகையில், “அப்போலோ ஷைன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் உடல்நலம் மற்றும் அவசரகாலங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலைபடுத்துவது ஆகியவற்றில் நாங்கள் கொண்டிருக்கும் அக்கறையை உறுதிப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவசரநிலைகளை எவ்வாறு கையாள வேண்டுமென்ற அறிவை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பள்ளிச் சூழலை நாங்கள் உருவாக்குகிறோம். மேலும் எங்களது மாணவர் உடலநல ஆரோக்கிய தூதுவர் திட்டத்தின் தொடக்கமானது, இளைய தலைமுறையினரிடையே பொறுப்புணர்வை உருவாக்குவதோடு ஆரோக்கியத்திற்கான ஒரு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென்ற எங்களது நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.”
அப்போலோ ஷைன் [Apollo SHINE], மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அவசரநிலைகளின் போது எந்தவொரு குழந்தையின் வாழ்க்கையையும் சமரசம் எதுவுமில்லாமல் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மிக உறுதியுடன் இருக்கிறது. இதுபோன்ற முன்முயற்சிகள் மூலம், அப்போலோ மருத்துவமனைகள் இந்தியாவில் மாணவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்விற்கான புதிய வரையறைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.