இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

0
161

இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலும் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டன. மேலும், வாரத்தில் மூன்று நாட்கள், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று நாடு முழுவதும் சற்று குறையத் தொடங்கியது. தமிழ்நாட்டில் 40,000க்கும் அதிகமாக பதிவான ஒரு நாள் பாதிப்பு, நேற்று 20,000 என குறைந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது.

அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரிகள் பிப்.1ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், இரவு நேர ஊரடங்கு நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் பிப் 1ம் தேதி முதல் நீக்கப்படுவதாகவும் அறிவித்தது. வழிபாட்டு தலங்களுக்கான அறிவிப்பில் மாற்றம் செய்து இன்று முதல் இந்த தளர்வு நடைமுறைக்கு வரும் என்றும் அரசு தெரிவித்தது.
இதன்படி வெள்ளிக் கிழமையான இன்று முதல், பொதுமக்கள் வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.