அரைநிர்வாண கோலத்தில் தனது சிஷ்யை-ஐ திருமணம் செய்த அகோரி மணிகண்டன்

0
267

அரைநிர்வாண கோலத்தில் தனது சிஷ்யை-ஐ திருமணம் செய்த அகோரி மணிகண்டன்

திருச்சியை சேர்ந்த பிரபல அகோரி சாமியார் பாபா மணிகண்டன் தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை சேர்ந்தவர் அகோரி பாபா மணிகண்டன். காசிக்கு தனது இளம் வயதில் சென்றவர் அங்கேயே தங்கி சாமியார்களோடு சாமியாராக சில காலம் இருந்தார். காசியில் இருக்கும் அகோரிகளுடன் தங்கி இருந்தவர், அவர்களின் வாழ்க்கை முறை பிடித்து போய், சிவ பக்தனாக மாறி, அவர்களோடு சேர்ந்த அகோரி பயிற்சி எடுத்தார். காசியில் தங்கி இருந்து சில வருடங்களுக்கு முன் அகோரி ஆன மணிகண்டன் அதன்பின் மற்ற சில அகோரிகளோடு சேர்ந்து தமிழ்நாடு திரும்பினார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சுடுகாட்டில் தங்கி இருந்தவர் திருச்சிக்கு இடம் பெயர்ந்து அங்கு தனது சொந்த ஊரான அரியமங்கலம் அருகே மக்களுக்கு ஆசி வழங்கி கொண்டு இருந்தார். இரவில் அடிக்கடி இவர் சுடுகாட்டில் பூஜை செய்வது வழக்கம். இவரை சந்திக்க வந்த பலரை சிஷ்யர்களாக ஏற்றுக்கொண்டு திருச்சிலேயே அவர்களை தங்க வைத்து பலருக்கு சிறப்பு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். சமீபத்தில் இவரின் சிஷ்யர் விபத்தில் பலியானார். பலியானவரின் உடலுக்கு அகோரி மணிகண்டன் திருச்சியில் இறுதி சடங்கு நடத்தியது பெரிய அளவில் சமூக வளையதளங்களில் வைரலானது.

இறந்து போன தனது சிஷ்யரின் உடலின் மீது ஏறி அமர்ந்து அகோரி மணிகண்டன் விசித்திர பூஜை செய்தார். மேலும் அகோரி பாபா மணிகண்டன் சாமியார் தொடர்ந்து நள்ளிரவில் பேய் ஓட்டுவது, சிறப்பு பூஜை என சங்குகள் முழங்க மிகுந்த சத்தத்துடன் பூஜை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து ஒரு பதட்டமான சூழ்நிலையில் மக்கள் இருந்து வருகின்றனர். திடீரென்று நள்ளிரவில் இதுபோன்று பூஜை நடத்துவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையிலும் அகோரி மணிகண்டன் நான் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய பூஜை செய்வதாகவும், மக்களின் நலனுக்கா பூஜை செய்வதாக தெரிவித்தார். நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் உடல்முழுவதும் விபூதி பூசிக்கொண்டு சங்குகள் முழங்க பூஜை செய்வது திருச்சி மாவட்டத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் மணிகண்டன் நடத்திய இந்த ஆன்ம சாந்தி பூஜை இணையம் முழுக்க வைரலாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் அகோரி சாமியார் மணிகண்டன் நேற்று தனது சிஷ்யயை திருமணம் செய்து கொண்டார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் சிஷ்யையாக பயிற்சி எடுத்து வந்தார். கடந்த சில காலமாக பிரியங்கா, மணிகண்டனுடன் சேர்ந்து பயிற்சி எடுத்து வந்தார். இதில் பிரியங்கா மீது காதல் வயப்பட்ட அகோரி சாமியார் மணிகண்டன் கோவிலில் வைத்து பிரியங்காவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி மந்திரம் ஓத திருமணம் செய்து கொண்டார். இவரின் அருகில் இருந்த மற்ற அகோரிகள் சங்குகள் ஊதி திருமணத்தை நடத்தி வைத்தனர். உடல் முழுக்க விபூதி பூசி அகோரி மணிகண்டன் அரை நிர்வாணத்தில் காட்சி அளித்தார். பிரியங்காவும் முகம் முழுக்க விபூதி பூசி இருந்தார். இந்த திருமணம் திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.