Tag: NAVARATRI UTSAV 2018 AT SRMIST… A RARE TREAT ON THE CARDS

SRMIST நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018

SRMIST நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிகழ்த்துக் கலை மற்றும் நுண்கலைகள் மையம் நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018 காட்டங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் கீழ் இயங்கும் நிகழ்த்துக் கலை மற்றும் நுண்கலைகள் மையம் அக்டோபர் 12, 13 ஆகிய இரு நாட்களில் மாலை 5.30 மணியளவில் நவராத்தி உற்சவம் 2018ஐ டாக்டர் தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் வெகு விமரிசையாக நடத்த உள்ளது. முதல்நாள் நிகழ்வான அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜூகல்பந்தியில் உலகப்புகழ்பெற்ற இரண்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். பத்மபூஷன் மற்றும் கிராமி விருது பெற்ற பண்டிட் விஷ்வ மோகன் பட் அவர்களும் இளம் வயலின் இசைக்கலைஞர் அம்பி சுப்பிரமணியம் அவர்களும் தம் இசைக்கச்சேரியை வழங்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேவியின் பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்தும் திரிசக்தி நடனநிகழ்ச்