Tag: KamalHaasan

தமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுகளாக உண்டாக்கப்பட்டது: கமல் ஹாசன்

தமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுகளாக உண்டாக்கப்பட்டது: கமல் ஹாசன்

Cine News, Cinema, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
தமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுகளாக உண்டாக்கப்பட்டது: கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை  “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன், "நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது
மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு – ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு – ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

News, Tamilnadu
மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு - ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு சென்னை: காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மே 19-ம் தேதி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த், திருமாவளவன், தமிழிசை உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். வெவ்வேறு கருத்துடையவர்களாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் ஒரே திசையில் பயணிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அண்டை மாநிலங்களுக்கும், காவிரி பிரச்னை
மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு – கமல்ஹாசன்

மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு – கமல்ஹாசன்

Ennvinotham Paar, India, News, Tamilnadu
மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு - கமல்ஹாசன் சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு முயற்சியாக ‘மய்யம் விசில் ஆப்’ என்ற புதிய செயலியை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். ‘மய்யம் விசில் ஆப்’ செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது:- பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை சாமானியர்களும் செய்யத்தூண்டும் ஒரு செயலி தான் ‘மய்யம் விசில் ஆப்’. பத்திரிகையாளர்களின் பலம் சாமானியருக்கு இருக்காது. பத்திரிகையாளர்களுக்கு துணையாக, தூரத்து உறவாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் செயல்படுவார்கள். நம்மை சுற்றி நடக்கும் சூழல் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவைகளை தனிமனிதன் ஊதி தெரியப்படுத்தும் அபாய சங்கு தான் ‘விசில் ஆப்’. இது, இருக்கும் குறைகளை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்
மத்திய அரசின் எடுபிடி தமிழக அரசு – கமல்ஹாசன் தாக்கு

மத்திய அரசின் எடுபிடி தமிழக அரசு – கமல்ஹாசன் தாக்கு

Cinema, Interview, News, Press Releases, Tamilnadu
மத்திய அரசின் எடுபிடி தமிழக அரசு - கமல்ஹாசன் தாக்கு https://www.youtube.com/watch?v=cCBbKDg4uOk திருச்சி: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திருச்சியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் நீதி மய்யம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி திருச்சி பொதுக்கூட்டம் பற்றி அறிவித்து இருந்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் தற்போது ஏற்கனவே 2016-ல் நடந்த நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அப்போது உச்ச நீதிமன்றம் 4 வாரத்துக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அப்போதும் சட்ட நுணுக்கங்களை தயாரித்து சாக்கு போக்கு காட்டி அது தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்தி
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுவது தான் போராட்டம்: கமல்ஹாசன் பேட்டி

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுவது தான் போராட்டம்: கமல்ஹாசன் பேட்டி

India, News, Tamilnadu
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடுவது தான் போராட்டம்: கமல்ஹாசன் பேட்டி சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி புறப்பட்டார். அவருடன் மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலை குழு உறுப்பினர்கள் ஸ்ரீபிரியா, கமிலா நாசர் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் கமல்ஹாசனுடன் ரெயிலில் பயணம் செய்தனர். ஓடும் ரெயிலில் நிருபர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். தமிழக அரசியல் எப்படி இருக்கிறது?. பதில்:- சீர்திருத்தப
மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்: கமல்ஹாசன்

மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்: கமல்ஹாசன்

India, News, Tamilnadu
மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்: கமல்ஹாசன் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும்; அரசை செவி சாய்க்க வைக்க வேண்டியது நமது கடமை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலை அருகேயுள்ள அ. குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 49 நாள்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் அவர் பேசினார். அதன் பின்னர் அவர், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் அவர்களது வேலையை சரிவர செய்தார்களா என்ப
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்!

News, Press Releases, Tamilnadu
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்! உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியியலில் இறங்கியுள்ளார். மக்களிடமும் இவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பல்வேறு கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரதீப் குமார் அவர்களின் தலைமையில் பூவை ஜெகதீஷ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளனர். கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து வருகின்றனர். மேலும் இவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தம் போட்டால் போடட்டும்  நாம் அமைதியாக இருப்போம்: ரஜினி

சத்தம் போட்டால் போடட்டும்  நாம் அமைதியாக இருப்போம்: ரஜினி

Cine News, Cinema, News, Tamilnadu
சத்தம் போட்டால் போடட்டும்  நாம் அமைதியாக இருப்போம்: ரஜினி அரசியலில் மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம் என்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது நெல்லை மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், அரசியலில் மற்றவர்கள் எல்லோரும் வேகமாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று நிறைய பேர் விமர்சித்து வருகிறார்கள். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும். நாம் அமைதியாக இருப்போம் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 32 மாவட்டங்களுக்கு 32 மாடி கட்டிக்கொண்டிருப்பதாகவும், அதற்கு ஏற்றவாறு அடித்தளம் என்பது வலுவாக இருக்க வேண்டும் என்றும் கூறிய ரஜனி, மிக ஆழமான அடித்தளம் கட்டமைப்பை கட்டிக் கொண்டிருக்கிறோம், ஒவ்வொரு விஷயத்தைய
அப்துல் கலாம் வீட்டில் கமல்ஹாசன் – அரசியல் பயணம் இனிதே தொடக்கம்

அப்துல் கலாம் வீட்டில் கமல்ஹாசன் – அரசியல் பயணம் இனிதே தொடக்கம்

India, News, Tamilnadu
ராமநாதபுரத்தில் உள்ள மறைந்த டாக்டர் திரு அப்துல்கலாம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்ற கமல்ஹாசன்.அவரது கலாமின் சகோதரரிடம் ஆசி பெற்றார். https://www.youtube.com/watch?v=NCLcK_0AU5E அப்துல் கலாம் வீட்டில் கமல்ஹாசன் - அரசியல் பயணம் இனிதே தொடக்கம் ராமநாதபுரம்: தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று தனது கட்சியின் பெயர் கொள்கைகளை அறிவிக்க உள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். https://twitter.com/ikamalhaasan/status/966153217737342976 அதன்படி, இன்று அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற கமலை, கலாம் பேரன் சலீம் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது, கலாம் புகைப்படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை சலீம் கமலிடம் வழங்கினார். வீட்டின் உள்ளே, அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை
பிப் 21ல் கமல் தொடங்க உள்ள அரசியல் பயண விபரம்

பிப் 21ல் கமல் தொடங்க உள்ள அரசியல் பயண விபரம்

Business, Cine News, Cinema, India, News, Press Releases, Tamilnadu
பிப் 21ல் கமல் தொடங்க உள்ள அரசியல் பயண விபரம் சென்னை : நடிகர் கமல் தன் முழு அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ம் தேதி தொடங்க உள்ளார். அவரின் அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் வீட்டிலிருந்து தொடங்க உள்ளார். அன்றைய தினம் கமல் மேற்கொள்ள உள்ள பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. காலை 7.45 மணிக்கு : அப்துல் கலாம் அவர்களின் வீட்டிற்கு செல்கிறார். காலை 8.15 மணிக்கு : அப்துல் கலாம் அவர்களின் பள்ளிக்கு செல்கிறார் காலை 8.50 மணிக்கு : இராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் மீனவர்களுடன் சந்திப்பு.