Tag: kamal

மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு – ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு – ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

News, Tamilnadu
மு.க ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு - ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு சென்னை: காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மே 19-ம் தேதி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த், திருமாவளவன், தமிழிசை உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். வெவ்வேறு கருத்துடையவர்களாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் ஒரே திசையில் பயணிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அண்டை மாநிலங்களுக்கும், காவிரி பிரச்னை
ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிப்பு!

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிப்பு!

Cine News, Cinema, India, News
ரஜினி - கமலுக்கு ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிப்பு! ஹைதராபாத்: நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2016-ஆம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திரைப்பட உலகிற்கு சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர்களுக்கு ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரும், மறைந்த அம்மாநில முதல்வரான என்.டி.ராமராவ் பெயரில் ‘என்.டி.ஆர் சிறப்பு தேசிய விருதுகள்’ வழங்கப்படுவது வழக்கம். அந்த வரிசையில் 2016-ஆம் ஆண்டுக்கான என்.டி.ஆர் சிறப்பு தேசிய விருதுகள் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந் இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நேரில் பார்வையிட்ட படங்கள்

களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நேரில் பார்வையிட்ட படங்கள்

Cine News, Cinema, India, News, Tamilnadu
களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நேரில் பார்வையிட்ட படங்கள் அரசியலில் களமிறங்கப் போவதாக கூறி வரும் நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி வரும் அவர், நேற்று தனது டுவிட்டர் பதிவில் வடசென்னைக்கு வரக்கூடிய ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு விளக்கியிருந்தார். ‘தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன’ என புகார் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் இன்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கமல், அப்பகுதி மக்களை சந்தித்தும் பேசினார்.