Tag: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி – மு.க.ஸ்டாலின் அறிக்கை

நன்றி தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நன்றி தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
நன்றி தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு இறுதி மரியாதை அளிப்பதற்காகத் திரண்ட தொண்டர்களுக்கும், வருகை தந்த முக்கிய பிரமுகர்களுக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: திமுக தலைவரை இழந்து கண் கலங்கி நிற்கிறோம். ஒட்டுமொத்த நாடே அவரது மரணத்தால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, அவரது பேராற்றலும், பெரும் சாதனைகளும் தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே எந்த அளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது. திமுக தலைவர், திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள