Raghu – Kethu

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா!

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா!

Aanmegam News, Jothidam, News, Raghu - Kethu, Tamilnadu
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா! தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இங்கு நாகநாதசாமி, கிரிகுஜாம்பிகை அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். ராகு பகவான், நாக கன்னி, நாக வள்ளி ஆகிய 2 துணைவிகளுடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது சிறப்பம்சம் ஆகும். நவக்கிரக பரிகார தலங்களில் நாகநாதசாமி கோவில், ராகுவுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாளில் இக்கோவிலில் ராகு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ராகு பகவான் நேற்று மதியம் 1.24 மணிக்கு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி நேற்று கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலில் கடந்த 11-ந் தேதி இரவு யாகசாலை பூஜைகள் தொடங்கின. 20-