
விவேகானந்தரின் வீர உரைகளை படித்து இளைஞர்கள் முன்னேற ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
விவேகானந்தரின் வீர உரைகளை படித்து இளைஞர்கள் முன்னேற ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
சென்னை, பிப்.16– விவேகானந்தரின் வீர எழுச்சி உரையை படித்து இளைஞர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
சென்னை ராமகிருஷ்ண மடம் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விவேகானந்த நவராத்திரி நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
நமது தாய்நாடாம் பாரத மணித் திரு நாடு, எல்லையில்லாப் பெருமைகளைக் கொண்ட திருநாடு ஆகும்.
முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் தந்த வள்ளல் குணம் படைத்த, பாரி, பேகன் போன்ற மன்னர்களையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறுவை மருத்துவ சிகிச்சை அறிந்த சுஸ்ருதர் போன்ற மருத்துவ அறிஞர்களையும், வான் வெளி அறிவியலை நன்கறிந்த ஆர்யபட்டர் போன்ற வானியல் விஞ்ஞானிகளையும்,
கணிதக் கலையில் ஒப்புவமை காட்ட முடியாத பாஸ்கராச்சாரியர் மு