Ullathu Ullapadi

மண்டபம் மீன் பிடி தளத்தில் அறிய வகை திருக்கை மீன்

மண்டபம் மீன் பிடி தளத்தில் அறிய வகை திருக்கை மீன்

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
மண்டபம் மீன் பிடி தளத்தில் அறிய வகை திருக்கை மீன் ​சத்யபாமா கடல் உயிரியலாளர்கள் திங்கட்கிழமை ஜூலை 15ம் தேதி அன்று ஓர் அறிய வகை திருக்கை மீன்கள் (2) மண்டபம் மீன் பிடி தளத்தில் தரை இறங்குவதை கண்டனர். இது இழுவலை மீன்பிடி செயல்பாட்டின் மூலமாக தற்செயலாக சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. மன்னார் வளைகுடா கடற்கரையில் இருந்து வெகுதூரத்தில் சுமார் நாற்பது முதல் ஐம்பது மீட்டர் ஆழத்தில் பிடி பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்த திருக்கை மீனின் நீளம் 2.45 மீட்டர் மற்றும் 1.97 மீட்டர் ஆகும். இந்த இரண்டு திருக்கை மீனும் சுமார் ஐம்பது முதல் எழுவது கிலோ எடை கொண்டவையாக இருக்கும், பல ஆயிரம் ருபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் திருக்கை மீன் வலையில் பிடிபட்டதும் அதன் வாலில் உள்ள விஷத்தன்மை கொண்ட முள் முதலில் நீக்கப்படும் என்றும் கூறினர். ​“இந்த திருக்
National Conference on LMIN – 2019 at Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam

National Conference on LMIN – 2019 at Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
National Conference on LMIN - 2019 at Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam National Conference on Light Matter Interactions at Nanoscale (LMIN - 2019) was organized at Indira Gandhi Centre for Atomic Research (IGCAR), Kalpakkam during July 15-17, 2019, with the support from BRNS and MRSI. The conference focused on plasmonic, photonic nanomaterials and their applications to materials sciences including chemical and biological sciences. The study of material properties of individual nanopaticles and their engineering application was the prime objective of the conference. The conference was attended by 120 leading scientists and students from all over India from various academic institutes like IITs, IISERs, national laboratories and DAE institutes, including participants f...
நடப்பு ஆண்டில் ரூ.600 கோடியில் 2,000 பஸ்கள்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

நடப்பு ஆண்டில் ரூ.600 கோடியில் 2,000 பஸ்கள்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

Hot News, News, Tamilnadu, Ullathu Ullapadi
நடப்பு ஆண்டில் ரூ.600 கோடியில் 2,000 பஸ்கள்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு சென்னை, ஜூலை 17– நடப்பு ஆண்டில் 600 கோடி ரூபாய் மதிப்பில் 2,000 பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தாக்கல் செய்த அறிக்கை விவரம் வருமாறு:– அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டுகளில் பல புதிய பேருந்துகளை பொது மக்களின் சேவைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும், புதியதாக 2,000 பேருந்துகள், 600 கோடி ரூபாய் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியாண்டில், அரசு நிதி நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் 10 அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி, நவீனப்படுத்தப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோய் ஆபத்தை கூட்டும்!

சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோய் ஆபத்தை கூட்டும்!

Health, Hot News, India, News, Ullathu Ullapadi
சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோய் ஆபத்தை கூட்டும்! சர்க்கரை மிகுந்த பானங்கள், பழரச பானம், கார்பனேட் செய்த பானங்கள் உள்ளிட்டவை, புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிரிட்டன் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவில் இந்தத் தொடர்பு தெரிய வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக 1,00,000 பேரை கவனித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம் தான், இதற்குக் காரணம் என்று பாரிஸ் பல்கலைக்கழகக் குழு கூறியுள்ளது. இருந்தபோதிலும் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்றும் இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். சர்க்கரை மிகுந்த பானம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? 5 சதவீத அளவுக்கும் மேல் சர்க்கரை உள்ள பானங்களை, சர்க்கரை மிகுந்த பானங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்
2018-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகள் அறிவிப்பு

2018-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகள் அறிவிப்பு

Business, Hot News, India, News, Press Releases, Ullathu Ullapadi
2018-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமியின் ஃபெலோஷிப் (அகாடமி ரத்னா) மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் (அகாடமி புரஸ்கார்) பெறுவோர் பட்டியலை சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு அறிவித்துள்ளது இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழுக் கூட்டம், அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில் 26, ஜுன் 2019 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலைத்துறை வித்தகர்களான ஜாஹிர் ஹுசேன், சோனல் மான்சிங், ஜதின் கோஸ்வாமி மற்றும் கே.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகிய நான்கு பேர் சங்கீத நாடக அகாடமியின் ஃபெலோஷிப் (அகாடமி ரத்னா) பெறுவதற்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தவிர, இசை, நடனம், நாடகம், பாரம்பரிய / நாட்டுப்புற / பழங்குடி இசை / நடனம் / நாடகம், பொம்மலாட்டம் போன்ற பிரிவுகள் மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக 44 கலைஞர்களும், சங்கீத நாடக அகாடமி விருது (அகாடமி புரஸ்கார்) பெ
“கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை” – நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல்

“கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை” – நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல்

Hot News, India, News, Ullathu Ullapadi
"கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை" - நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல் கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார். மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வ பதிலளித்த அவர், பிராந்திய கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று தெளிவுபடுத்தினார். மாநிலத்துக்குள் இருக்கும் கிராமப்புற வங்கிகளை இணைப்பதன் மூலம் செலவைக் குறைத்து, தொழில்நுட்பத்தை மேம்படுத்த வழி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அந்த வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.