Ravana Darbar

மின்நுகர்வு அதிகரித்ததால்தான் மின்கட்டணம் அதிகமாகியுள்ளது – உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் விளக்கம்

மின்நுகர்வு அதிகரித்ததால்தான் மின்கட்டணம் அதிகமாகியுள்ளது – உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் விளக்கம்

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
மின்நுகர்வு அதிகரித்ததால்தான் மின்கட்டணம் அதிகமாகியுள்ளது - உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் விளக்கம் சென்னை: கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்தது. இந்த அறிவிப்பில் விதிமீறல்கள் நடைபெறுவதாகவும், மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் மின் நுகர்வோர் சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் மின்சார கணக்கீடு செய்வதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக பதிலளிக்குமாறு மின்சார வாரியத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால எடைகற்கள்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால எடைகற்கள்!

Cine News, Cinema, Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால எடைகற்கள்! கீழடி மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பண்பாட்டு மேட்டில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வுக் குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை உருளை வடிவில் அமைந்துள்ளன. அதனின் கீழ்ப்பகுதி தட்டையாக உள்ளன. இவை ஒவ்வொன்றும் முறேயே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் வணிகம் நடந்ததற்கான சாத்தியக் கூறுகள் வெளிப்பட்டுள்ளன. அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 20 குழிகள் அம
கணக்குகளை சமர்பிக்கத் தயார் – விஷாலுக்கு பெண் ஊழியர் ரம்யா சவால்

கணக்குகளை சமர்பிக்கத் தயார் – விஷாலுக்கு பெண் ஊழியர் ரம்யா சவால்

Cinema, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
கணக்குகளை சமர்பிக்கத் தயார் - விஷாலுக்கு பெண் ஊழியர் ரம்யா சவால் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விஷால் சொன்ன குற்றச்சாட்டைப் பெண் ஊழியர் மறுத்திருக்கிறார். கடந்த 6 ஆண்டுக் கால கணக்குவழக்குகளை போலீசார் முன்பு ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகச் சவால் விடுத்திருக்கிறார். தவறு யார் மீது? சென்னை, சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என புகார் எழுந்தது. பின்னர் பிடிவாரண்ட் வரை சென்ற வழக்கில் விஷால் தரப்பில் 80 சதவீதம் வருமான வரித்துறைக்கு பணத்தைக் கட்டினர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றதில் நிலுவையில் உள்ள நிலையில், விஷால் ஃபிலிம் ஃபேக்ட நிறு
அடேங்கப்பா.. கொரோனாவிலும் ரணகளமா : ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க்!

அடேங்கப்பா.. கொரோனாவிலும் ரணகளமா : ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க்!

Cine News, Cinema, Hot News, India, Interview, News, Ravana Darbar
அடேங்கப்பா.. கொரோனாவிலும் ரணகளமா : ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க்! புனே: புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர் ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார். உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவை விரட்டி அடிக்க முடியுமென்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மாஸ்க் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்றாலும் கூட்டத்தை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மாஸ்க் என்
“கொரோனாவால் இனிதான் மோசமான நிலை” – ‘கொரோனாவுடன் வாழப் பழகுவதைத் தவிர வேறு வழியில்லை’ – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

“கொரோனாவால் இனிதான் மோசமான நிலை” – ‘கொரோனாவுடன் வாழப் பழகுவதைத் தவிர வேறு வழியில்லை’ – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

Health, Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu
“கொரோனாவால் இனிதான் மோசமான நிலை” - 'கொரோனாவுடன் வாழப் பழகுவதைத் தவிர வேறு வழியில்லை' - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இன்னும் மோசமான நிலை இனிதான் வரப்போவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், கொரோனா வைரசுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டதை.குறிக்கும் வகையில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனம், ஆறு மாதங்களுக்கு முன் வரை நமது உலகமும் வாழ்க்கையும் ஒரு புதிய வைரசால் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்படும் என்பதை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்துள்ளதாகக் கூறியுள்ள டெட்ராஸ், அனைத்து நாடுகளும் நீண்டகால போராட்டத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அடுத்துவரும் மாதங்களி
சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், எஞ்சிய காவலர்களை கைது செய்யும் பணி நேற்று இரவு முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு எஸ்.ஐ.யான பால கிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.