Hot News

விஜயின் சர்கார் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

விஜயின் சர்கார் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

Cine News, Cinema, Hot News, Interview, Ullathu Ullapadi
விஜயின் சர்கார் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உடன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கி இருக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் அடுத்த படத்தை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையையும் தேனாண்டாள் பிலிம்ஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ர
தமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுகளாக உண்டாக்கப்பட்டது: கமல் ஹாசன்

தமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுகளாக உண்டாக்கப்பட்டது: கமல் ஹாசன்

Cine News, Cinema, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
தமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுகளாக உண்டாக்கப்பட்டது: கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை  “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன், "நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது
கர்நாடகாவில்  ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடை – திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு

கர்நாடகாவில்  ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடை – திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு

Cine News, Cinema, Hot News, India, Interview, News, Ravana Darbar, Tamilnadu
கர்நாடகாவில்  ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடை - திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு பெங்களூரு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் வாட்டாள் நாகராஜ் தற்போது விடுத்து இருந்த அறிக்கை ஒன்றில் "சத்யராஜ் போல ரஜினி மன்னிப்பு கேட்டாலும் காலா படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்" என கூறி இருந்தார். தற்போது கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் காலா படத்திற்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாநில நலன் கருதி காலா படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறி உள்ளது.
32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot-களுக்கு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்!

32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot-களுக்கு அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்!

Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu
32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot--களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வழங்கி கௌரவிப்பு! இன்று (28.05.2018) சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள 108-ன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற National Pilot Day Celebration--2018-ல் கலந்து கொண்டு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் 32 மாவட்டங்களிலிருந்து சிறப்பாக சேவையாற்றிய 108 ஆம்புலன்ஸ் Pilot-களுக்கு சான்றிதழ் மற்றம் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் ;- மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு திறமை மற்றும் ஆற்றல் வாய்ந்த அவசர மருத்துவ சேவை வழங்க 108 அவசரகால ஊர்தி சேவையை உறுதிசெய்துள்ளது. உயிர் காக்கும
ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது – ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது – ரஜினிகாந்த்

Ennvinotham Paar, Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது - ரஜினிகாந்த் சென்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்றார். ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, “ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஆலை இயங்காது. அரசாணையின் படி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்குள் இருக்கும் பொருட்களை சீல் வைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என கூறினார். இந்தநிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம். அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்”.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்”.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu, Ullathu Ullapadi
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்”.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்குமாறு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையின் முழு விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனம் இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013 அன்று, மேற்படி தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள். அதன் பேரில், மின் இணைப்பு துண்டி
வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினிகாந்த்

வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினிகாந்த்

Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினிகாந்த் சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 5 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் கூறியுள்ளத
பண முதலைகளுக்கு வங்கி கடன் – இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்!

பண முதலைகளுக்கு வங்கி கடன் – இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
பண முதலைகளுக்கு வங்கி கடன் - இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்! தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள இரும்புத்திரை இன்று உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஆதார் கார்ட் ஆகியவற்றை பற்றியும் இதன் மூலம் மறைமுகமாக நடக்கும் சுரண்டல்களையும் ஊழல்களை பற்றியும் புட்டு புட்டு வைத்துள்ளார் விஷால். அதுமட்டுமில்லாமல் வங்கி கடன் என்ற பெயரில் நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோருக்கு கடன் கொடுத்து மக்களின் பணத்தை வீணடித்த மத்திய அரசின் உண்மை முகத்தை தோலுரித்துள்ளார். அதேபோல் பண மதிப்பிழப்பு பிரச்சனையால் மக்கள் படும் பிரச்சனைகளை வெளிப்படையாக சுட்டி காட்டியுள்ளார். வங்கி கடன் என்பது ஏழை மக்களுக்கு எட்டா கனியாக இருப்பதை தோலுரித்து காட்டியுள்ளளார். இது போன்ற மத்திய அ
மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு – கமல்ஹாசன்

மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு – கமல்ஹாசன்

Ennvinotham Paar, India, News, Tamilnadu
மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு - கமல்ஹாசன் சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு முயற்சியாக ‘மய்யம் விசில் ஆப்’ என்ற புதிய செயலியை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். ‘மய்யம் விசில் ஆப்’ செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது:- பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை சாமானியர்களும் செய்யத்தூண்டும் ஒரு செயலி தான் ‘மய்யம் விசில் ஆப்’. பத்திரிகையாளர்களின் பலம் சாமானியருக்கு இருக்காது. பத்திரிகையாளர்களுக்கு துணையாக, தூரத்து உறவாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் செயல்படுவார்கள். நம்மை சுற்றி நடக்கும் சூழல் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவைகளை தனிமனிதன் ஊதி தெரியப்படுத்தும் அபாய சங்கு தான் ‘விசில் ஆப்’. இது, இருக்கும் குறைகளை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்
வட்டி விகிதத்தை குறைக்க தென்மாநில சிறு – குறு – நடுத்தர தொழில்  நிறுவன அமைப்புகள் கோரிக்கை!

வட்டி விகிதத்தை குறைக்க தென்மாநில சிறு – குறு – நடுத்தர தொழில்  நிறுவன அமைப்புகள் கோரிக்கை!

Business, Hot News, India, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
வட்டி விகிதத்தை குறைக்க தென்மாநில சிறு - குறு - நடுத்தர தொழில்  நிறுவன அமைப்புகள் கோரிக்கை! சென்னையில் 2018 பிப். 14 முதல் 15 வரை நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளின் கூட்டம் வலியுறுத்தல் பொதுவான  கோரிக்கை மனு மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு சென்னை, பிப்.15, சென்னையில் 2018 பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற தென் மாநிலங்களை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவன அமைப்புகளின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக இந்த அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது, இனி ரூ.5 கோடி முதல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களை குறு நிறுவனங்களாகவும் ரூ.5 கோடி முதல் ரூ.25 கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களை சிறுதொழில் நிறுவனங்களாகவும் ரூ.25 கோடி முதல் ரூ.250கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களை நடுத்தர