Hot News

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்”.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்”.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu, Ullathu Ullapadi
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்”.. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்குமாறு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையின் முழு விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனம் இயங்கி வருகின்றது. கடந்த 23.3.2013 அன்று, மேற்படி தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள். அதன் பேரில், மின் இணைப்பு துண்டி
வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினிகாந்த்

வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினிகாந்த்

Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினிகாந்த் சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 5 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் கூறியுள்ளத
பண முதலைகளுக்கு வங்கி கடன் – இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்!

பண முதலைகளுக்கு வங்கி கடன் – இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
பண முதலைகளுக்கு வங்கி கடன் - இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்! தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள இரும்புத்திரை இன்று உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஆதார் கார்ட் ஆகியவற்றை பற்றியும் இதன் மூலம் மறைமுகமாக நடக்கும் சுரண்டல்களையும் ஊழல்களை பற்றியும் புட்டு புட்டு வைத்துள்ளார் விஷால். அதுமட்டுமில்லாமல் வங்கி கடன் என்ற பெயரில் நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோருக்கு கடன் கொடுத்து மக்களின் பணத்தை வீணடித்த மத்திய அரசின் உண்மை முகத்தை தோலுரித்துள்ளார். அதேபோல் பண மதிப்பிழப்பு பிரச்சனையால் மக்கள் படும் பிரச்சனைகளை வெளிப்படையாக சுட்டி காட்டியுள்ளார். வங்கி கடன் என்பது ஏழை மக்களுக்கு எட்டா கனியாக இருப்பதை தோலுரித்து காட்டியுள்ளளார். இது போன்ற மத்திய அ
மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு – கமல்ஹாசன்

மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு – கமல்ஹாசன்

Ennvinotham Paar, India, News, Tamilnadu
மய்யம் விசில் ஓர் மந்திரக்கோல் அல்ல, இது ஒரு அபாயச் சங்கு - கமல்ஹாசன் சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு முயற்சியாக ‘மய்யம் விசில் ஆப்’ என்ற புதிய செயலியை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். ‘மய்யம் விசில் ஆப்’ செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது:- பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை சாமானியர்களும் செய்யத்தூண்டும் ஒரு செயலி தான் ‘மய்யம் விசில் ஆப்’. பத்திரிகையாளர்களின் பலம் சாமானியருக்கு இருக்காது. பத்திரிகையாளர்களுக்கு துணையாக, தூரத்து உறவாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் செயல்படுவார்கள். நம்மை சுற்றி நடக்கும் சூழல் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவைகளை தனிமனிதன் ஊதி தெரியப்படுத்தும் அபாய சங்கு தான் ‘விசில் ஆப்’. இது, இருக்கும் குறைகளை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்
வட்டி விகிதத்தை குறைக்க தென்மாநில சிறு – குறு – நடுத்தர தொழில்  நிறுவன அமைப்புகள் கோரிக்கை!

வட்டி விகிதத்தை குறைக்க தென்மாநில சிறு – குறு – நடுத்தர தொழில்  நிறுவன அமைப்புகள் கோரிக்கை!

Business, Hot News, India, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
வட்டி விகிதத்தை குறைக்க தென்மாநில சிறு - குறு - நடுத்தர தொழில்  நிறுவன அமைப்புகள் கோரிக்கை! சென்னையில் 2018 பிப். 14 முதல் 15 வரை நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளின் கூட்டம் வலியுறுத்தல் பொதுவான  கோரிக்கை மனு மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு சென்னை, பிப்.15, சென்னையில் 2018 பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற தென் மாநிலங்களை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவன அமைப்புகளின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக இந்த அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது, இனி ரூ.5 கோடி முதல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களை குறு நிறுவனங்களாகவும் ரூ.5 கோடி முதல் ரூ.25 கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களை சிறுதொழில் நிறுவனங்களாகவும் ரூ.25 கோடி முதல் ரூ.250கோடி வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களை நடுத்தர
அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு

அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு

Cine News, Cinema, Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு நியூயார்க்: அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என பேசினார். அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தியா குறித்த கருத்தரங்கில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். தமிழில் வணக்கம் எனக்கூறி பேச்சை தொடங்கிய அவர், நாளை நமதே எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நே
தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா: ஆர்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.16 இலட்சம் பாரிவேந்தர் வழங்கினார்

தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா: ஆர்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.16 இலட்சம் பாரிவேந்தர் வழங்கினார்

Business, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா: ஆர்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.16 இலட்சம் பாரிவேந்தர் வழங்கினார் தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களில் இல்லாத அமைப்பாகத் தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செயல்பட்டுவருகிறது. ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்று சொல்லப்படும் அளவிற்குத் தமிழ்வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளை ஆற்றிவரும் தமிழ்ப்பேராயம் ஆண்டுதோறும் 12 தலைப்புகளில் ரூ. 22-இலட்சம் பெறுமான விருதுகளை வழங்கிவருகிறது. அதன்படி, 2017ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராயம் விருது வழங்கும் விழா, இன்று (31.01.2018) இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது.  SRM பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் விருதுகளை வழங்கினார். தமிழ்ப் படைப்பாளர்கள், நூ
பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu
பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு! சென்னை: உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்து நிலைகளிலும் பேருந்து கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. சொகுசு பேருந்துகளில் கி.மீ.,க்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது. விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30கி.மீ வரை கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.85ஆக குறைக்கப்படுகிறது.
ஜைன துறவியான பட்டதாரி பெண்

ஜைன துறவியான பட்டதாரி பெண்

Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
ஜைன துறவியான பட்டதாரி பெண் சென்னையைச் சேர்ந்த மம்தா கட்டாரியா என்ற எம் பி ஏ படித்த பட்டதாரி இல்லற வாழ்க்கையை துறந்து, ஸந்நியாசம் வாங்கிக் கொண்டிருக்கிறர் . இது குறித்த சென்னை அயனாவரத்தில் உள்ள டாடிபாடி ஜைன ஆலயத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. ‘ ஜைன மதத்தின் தத்துவங்களை எடுத்துரைப்பதற்காகவும், அதனை பரப்புரை செய்வதற்காக ஜைன துறவிகள் சுற்றுபயணம் மேற்கொள்வதுண்டு. அது போன்ற தருணங்களில் யாரேனும் துறவற வாழ்க்கையை வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர்களுக்கு தீக்ஷா வழங்கப்படும். அதனை மூன்று நாள் வைபவமாகக் கொண்டாடுவார்கள். அது போன்றதொரு விழா தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை தி நகரில் வசித்து வரும் மம்தா கட்டாரியா என்ற 29 வயது எம் பி ஏ படித்த பட்டதாரி பெண் சாதாரண லௌகீக வாழ்க்கையை புறந்தள்ளி துறவியாக வாழ உறுதி கொண்டிருக்கிறார். அவருக்கு இங்கு வரு
சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டபடி 2020-ல் செயற்கை கோள் அனுப்பப்படும்: இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி

சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டபடி 2020-ல் செயற்கை கோள் அனுப்பப்படும்: இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி

Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டபடி 2020-ல் செயற்கை கோள் அனுப்பப்படும்: இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி ஈரோடு: பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் நடந்த பள்ளி பவள விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: மாணவர்கள் குறைந்த எடையுள்ள செயற்கை கோளை தயாரித்தால் இலவசமாக விண்ணில் செலுத்தப்படும். இளம் விஞ்ஞானிகள் புதிய உத்திகளை கண்டறிவதுடன் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.மாணவர்கள் செயற்கை கோள் தயாரிப்பில் ஈடுபட்டால் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கும் வழங்க முடியும். ஆண்டிற்கு 12 முதல் 18 செயற்கை கோல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார். இந்த ஆய்வு பணிகளுக்காக செயற்கைக்கோள் திட்டம், ஆதித்யா