Ennvinotham Paar

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற ஆவணங்களை விளம்பரம் செய்ய வேண்டும்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற ஆவணங்களை விளம்பரம் செய்ய வேண்டும்

Ennvinotham Paar, Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற ஆவணங்களை விளம்பரம் செய்ய வேண்டும் புதுடெல்லி:  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நடைமுறை வருகிற பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக அமலுக்கு வருகிறது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது போலீசில் வழக்கு நிலுவையில் இருந்தால் அது பற்றிய விவரங்கள், தண்டிக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல்கள் அனைத்தையும் முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்காவது விளம்பரம் செய்ய வேண்டும். குற்ற நடவடிக்கைகள் அல்லது வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் என்றால், அது குறித்த தகவல்களையும் அந்த வேட்பாளர் விளம்பரம் செய்திருக்க வேண்டும். இதைப்போல தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற ஆவணங்க
வாயலூர் பாலாறு பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானத்திற்கான பூமி பூஜை 

வாயலூர் பாலாறு பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானத்திற்கான பூமி பூஜை 

Business, Ennvinotham Paar, Hot News, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
அணுசக்தித் துறை வழங்கும் நிதியின் மூலம் வாயலூர் பாலாறு பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானத்திற்கான பூமி பூஜை  வாயலூர் பகுதியில் அமைந்த பாலாற்றின் குறுக்காக தடுப்பணை அமைத்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரத்தைப் பெருக்க  வேண்டும் என்ற காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது வெற்றிகரமாக நிறைவேற உள்ளது.  தமிழ்நாடு அரசின் நீர் வளத் துறை (Water Resources Department - WRD) மற்றும் பொதுப்பணி துறை (Public Works Department - PWD)  போன்றவற்றின மூலமாக முப்பத்தி இரண்டரை கோடி ரூபாய் (Rs 32.50 Crore) செலவில் கட்டப்படவுள்ள இந்த தடுப்பணை கட்டுமானப் பணிகளைத் துவக்குவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி 25 பிப்ரவரி 2019 அன்று காலை நடைபெற உள்ளது. பொதுப் பணிகள் நிறுவனத்தின் (General Services Organisation – DAE – Kalpakkam) மேற்பார்வையின் கீழ் நிறைவேற உள்ள இந்த திட்டத்தி
ஒப்பந்தத்தை மறைத்த இ4 என்டர்டெயின்மெண்ட் படக்குழுக்கு  இயக்குநர் பாலாவின் பதிலடி..!

ஒப்பந்தத்தை மறைத்த இ4 என்டர்டெயின்மெண்ட் படக்குழுக்கு  இயக்குநர் பாலாவின் பதிலடி..!

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, Interview, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
ஒப்பந்தத்தை மறைத்த இ4 என்டர்டெயின்மெண்ட் படக்குழுக்கு  இயக்குநர் பாலாவின் பதிலடி..! பாலா இறுதி செய்தவர்மா திரைப்பட முதல் பிரதியில் தங்களுக்கு திருப்தியில்லை என தயாரிப்பு நிறுவனம் கூறியதை ஏற்க மறுத்து படைப்பாளியாக தனது நிலைப்பாட்டில் உறுதி காட்டியுள்ளார் பாலா. இதனால் அப்படத்தில் இருந்து விலகி கொள்ளவும் சம்மதித்து தயாரிப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த்தில் கையெப்பமிட்டு நாகரிகமாக விலகி கொண்டிருக்கிறார் இயக்குனர் பாலா. தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடித்திருக்கும் தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ திரைப்படம் தங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்பதால் மீண்டும் வேறொரு இயக்குநரை வைத்து படத்தை உருவாக்கப் போவதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான E-4 Entertainment நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது
ஃபலகட்டா – சல்சலாபரி தேசிய நெடுஞ்சாலைப் பாதையை நான்கு வழி பாதையாக மாற்றும் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

ஃபலகட்டா – சல்சலாபரி தேசிய நெடுஞ்சாலைப் பாதையை நான்கு வழி பாதையாக மாற்றும் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

Business, Ennvinotham Paar, Hot News, India, News, Press Releases
ஃபலகட்டா – சல்சலாபரி தேசிய நெடுஞ்சாலைப் பாதையை நான்கு வழி பாதையாக மாற்றும் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் புதுதில்லி, பிப்ரவரி 09, 2019 பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று ஜல்பைகுரிக்கு பயணம் மேற்கொண்டார். தேசிய நெடுஞ்சாலை – 31 டியின் ஃபலகட்டா – சல்சலாபரி பகுதியை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் அங்கு புதிய உயர் நீதிமன்றக் கிளையை தொடங்கிவைத்தார். 41.7 கி.மீ. நீளம் கொண்ட ஃபலகட்டா – சல்சலாபரி பாதை கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் செயல்படுத்தப்பட்ட இப்பாதை வடகிழக்கு பகுதிக்கான முக்கிய இணைப்பாகும். இத்திட்டம் கட்டுமானம்-செயலாக்கம்-பரிமாற்றம் என்ற முறையில் இரண்டரை ஆண்டுகளில் முடிவடையும். இந்தத் திட்டம் மூலம் சல்சலாபரி மற்றும் அளிந்துவாரில் இருந்து சிலிகுரி வரையிலான தூரம் சுமார்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, Interview, News, Tamilnadu
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு சென்னை 2019, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். இத்திருமணத்தில், நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது. சமீபத்தில் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு திருநாவுக்கரசர், திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் தெரிவித்தது. தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பில் அரசியல் வி
ரூ.6.5 லட்சம் மொத்த வருவாய் இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை! எப்படி தெரியுமா?

ரூ.6.5 லட்சம் மொத்த வருவாய் இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை! எப்படி தெரியுமா?

Cinema, Ennvinotham Paar, Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
ரூ.6.5 லட்சம் மொத்த வருவாய் இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை!  எப்படி தெரியுமா? புதுடெல்லி:  மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- பொருளாதாரத்தில் மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா உள்கட்டமைப்பில் தன்னிறைவு, சுகாதாரமான குடிநீர் ஆகியவற்றுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான இந்தியா, வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்டவற்றில் இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்பில் இனி ஒற்றைச்சாளர முறை கடைபிடிக்கப்படும். 2030 இந்தியா என்ற தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும். வீடுகளற்ற, நாடோடி மக்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்காக தனிவாரியம் அமைக்கப்படும். மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.3.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்பு

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்பு

Business, Ennvinotham Paar, Hot News, India, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்பு புதுடெல்லி, பிப். 1– ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிரந்தர கழிவு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடுத்தர வர்க்கத்தினர் 3 கோடி பேர் பயனடைவார்கள் நடப்பு ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40 ஆயிரம் ரூபாய் வரையிலான வைப்பு நிதிக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்; வீட்டு வாடகைக்கான வரிச்சலுகை வரம்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும். சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் இரண்டாவது வீட்டிற்கும் வரிச்சலுகை உண்டு என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம
இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, Interview, News, Tamilnadu
இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த தடையில்லை  - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு குறித்த தகவல் ஏதும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தமான கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உ
மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Cinema, Ennvinotham Paar, Hot News, India, News, Tamilnadu
மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மதுரை: டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக ரூ.1264 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 201.75 ஏக்கரில் அமைய உள்ளது. இங்கு 750 படுக்கைகள், 16 ஆபரேசன் தியேட்டர்கள், 18 ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரங்குகள் இந்த மருத்துவமனையில் அமைய உள்ளன. மேலும் 100 மாணவ- மாணவிகள் படிக்கும் மருத்துவக்கல்லூரி, 60 பேர் பயிலும் நர்சிங் கல்லூரி ஆகியவையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந
கஜா புயல் பாதிப்பில் வீடு இழந்த விவசாயிகளுக்கு சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர்

கஜா புயல் பாதிப்பில் வீடு இழந்த விவசாயிகளுக்கு சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர்

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, News, Tamilnadu
கஜா புயல் பாதிப்பில் வீடு இழந்த விவசாயிகளுக்கு சூர்யா - கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்தனர் கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக; நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி விவசாயிகள் துயர் துடைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து அவர்களின் ரசிகர் மன்றத்தினர் நேரடியாக களத்தில் இறங்கினர். புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் தங்கி தேவையான உதவிகளைச் செய்தனர். தஞ்சை மாவட்டம், ப