Hot News

ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம்: நயன்தாரா நெத்தியடி பதில்

ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம்: நயன்தாரா நெத்தியடி பதில்

Cine News, Cinema, Hot News, Interview, Ravana Darbar
ராதாரவி போன்றோரின் நடத்தையை தயவு செய்து ஊக்கப்படுத்த வேண்டாம்: நயன்தாரா நெத்தியடி பதில் நான் மிகவும் அரிதாகவே பொது அறிக்கைகளை வெளியிடுகிறேன். ஏனெனில் நான் பேசுவதை விட என் வேலை பேச வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சில நேரங்களில் நான் பேச வேண்டிய கட்டாயம் அமைந்து விடுகிறது. இன்று, என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலியல் தொல்லைகளை தாங்கிக் கொள்ளும் பெண்களின் போராட்டத்திற்காகவும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன். முதலில், திரு.ராதாரவியின் தவறான பேச்சை கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனப்பூர்வமான நன்றிகள் சார். திரு.ராதாரவி மற்றும் அவரைப் போன்று பெண்களை இழிவாக பேசும் சிலருக்கும், உங்களையும் ஒரு பெண்மணி தான் பெற்றெ
இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்: எடப்பாடி தாக்கு

இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்: எடப்பாடி தாக்கு

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்: எடப்பாடி தாக்கு ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கினார். ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க. ஆட்சி தான் என்றும் அவர் கூறினார்.மக்கள் ஆதரவை இழந்த கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (24–ந் தேதி) தனது மூன்றாவது நாள் பிரச்சாரமாக வேலூர் பாராளுமன்ற தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்தும், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளார் ஏ.கே.மூர்த்தி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் சம்பத் ஆகியோரை ஆதரித்து, சத்துவாச்சாரி, ஆற்காடு பேருந்து நிலையம், முத்துக்கடை, சோளிங்கர் ஆகிய இடங்களில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :- அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள்
நடிகர் ராதா ரவி திமுகவில் இருந்து நீக்கம்! மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!!

நடிகர் ராதா ரவி திமுகவில் இருந்து நீக்கம்! மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
நடிகர் ராதா ரவி திமுகவில் இருந்து நீக்கம்! மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!! நேற்று முன்தினம் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய, மூத்த நடிகர் ராதா ரவி, நடிகை நயன்தாரா பற்றி மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பேசியுள்ளதற்கு பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கோபமாக சில பதிவுகளை போட்டுள்ளார். ஒரு பழம்பெரும் நடிகர் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இழிவான வகையில் ஒருவரை விமர்சனம் செய்திருப்பதும், அதற்கு எதிராக எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கண்டனத்துக்குரிய என குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/VigneshShivN/status/1109697129646190592 இந்நிலையில் தான் நடிகர் ராதாரவியை திமுகவில் இருந்து அக்கட்சி தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பா
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் ஆண்களை மிஞ்சப்போகும் பெண்கள் ஆய்வில் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் ஆண்களை மிஞ்சப்போகும் பெண்கள் ஆய்வில் தகவல்

Ennvinotham Paar, Hot News
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் ஆண்களை மிஞ்சப்போகும் பெண்கள் ஆய்வில் தகவல் புதுடெல்லி, நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய 1952-ம் ஆண்டு காலகட்டத்தில் ஆண்களே அதிக அளவில் வாக்களித்து வந்தனர். எனினும் ஆண்டுகள் செல்ல செல்ல இந்த நிலைமை மாறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் நடந்துள்ள தேர்தல்கள் குறித்து பிரபல எழுத்தாளர்களான பிரன்னாய் ராய், தொரப் சொபரிவாலா ஆகியோர் ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் இந்திய தேர்தலில் ஆண்-பெண் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்து பல்வேறு தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். அதன்படி கடந்த 1962 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான நாடாளுமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், ஆண்களின் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. தற்போது ஆண்களும், பெண்களும் சமமான பங்களிப
நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டி இல்லை மக்கள் நீதி மய்யத்தின் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்

நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டி இல்லை மக்கள் நீதி மய்யத்தின் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்

Hot News, News, Tamilnadu, Ullathu Ullapadi
நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டி இல்லை மக்கள் நீதி மய்யத்தின் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கோவை, நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியலை நேற்று வெளியிட்ட கமல்ஹாசன், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். கவிஞர் சினேகன் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். டார்ச் லைட் சின்னம் நாடாளுமன்ற தேர்தலிலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. தேர்தல் கமிஷன் இந்த கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. இந்திய குடியரசு கட்சி, வளரும் தமிழகம் கட்சிகள் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து உள்ளன. மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை கமல்ஹாசன் கடந்த 20-ந் தேதி வெளியிட்டார். அப்போது தமிழகத்தில் மொத
தமிழகத்தில் திட்டமிட்டபடி ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
தமிழகத்தில் திட்டமிட்டபடி ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு சென்னை, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. சித்திரை திருவிழா இந்த தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று பார்த்தசாரதி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், மதுரையில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளதால், தேர்தலை தள்ளிவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இதேபோல், தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், “ஏப்ரல் 18-ந்தேதி கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் தினம் வருகிறது. அன்று தேவாலயங்களில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெறும். தமிழகத்தில் தேவாலயங்களின் வளாகத்தில் பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளை ஓட்டுசாவடியாக பயன்படுத
ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவிகள் தினம்

ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவிகள் தினம்

Cinema, Hot News, News, Tamilnadu, Ullathu Ullapadi
ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவிகள் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. ✅ அழிந்து வரும் சிட்டு குருவி இனத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குருவிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. இதில் சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன. இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன. சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில
பாலியல் வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டம்

பாலியல் வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டம்

Hot News, News, Tamilnadu, Ullathu Ullapadi
பாலியல் வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டம் சென்னை,மார்ச்.19– கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணாதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:– அண்ணா தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் 1. அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் – மாதாந்திர நேரடி உதவித் தொகை ரூபாய் 1,500 வழங்கும் திட்டம் : இந்தியாவில் வறுமையை ஒழித்து மக்களுக்கு வளமான வாழ்க்கையைத் தர வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும் எண்ணற்றோர் இன்னமும் துயர்மிகு வறுமைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஓரளவுக்கு மட்டுமே மக்களைச் சென்றடைந்துள்ளன என்பதையே அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கு
நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதி

நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதி

Ennvinotham Paar, Hot News, News, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதி சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, கோவையில் மெட்ர
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வருமாறு:- அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீர் மேலாண்மை திட்டங்