Cinema

‘தாயம்’ படத்தை இயக்கிய டைரக்டர் கண்ணன் ரங்கசாமி மரணம்

‘தாயம்’ படத்தை இயக்கிய டைரக்டர் கண்ணன் ரங்கசாமி மரணம்

Cine News, Cinema
‘தாயம்’ படத்தை இயக்கிய டைரக்டர் கண்ணன் ரங்கசாமி மரணம் ‘தாயம்’ படத்தை டைரக்டு செய்தவர் கண்ணன் ரங்கசாமி. ஒரே அறைக்குள் வித்தியாசமாக எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. சென்னை, கண்ணன் ரங்கசாமிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நிலை மோசமடைந்து ‘கோமா’ நிலைக்கு சென்றார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு கண்ணன் ரங்கசாமி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 29. கண்ணன் ரங்கசாமிக்கு திருமணம் ஆகவில்லை. அவரது உடல் சென்னை காட்டுப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று (திங்கட்கிழமை) உடல் தகனம் நடக்கிறது.
ஹார்வர்டில் தமிழ் இருக்கை: விஷால் ரூ.10 லட்சம் நிதி

ஹார்வர்டில் தமிழ் இருக்கை: விஷால் ரூ.10 லட்சம் நிதி

Cine News, Cinema
ஹார்வர்டில் தமிழ் இருக்கை: விஷால் ரூ.10 லட்சம் நிதி ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கைக்காக நடிகர் விஷால் ரூ. 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து நடிகர் விஷால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: கடந்த 380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று கோடி பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடி பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரு, சம்ஸ்கிருத மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால், 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு இருக்கை இல்லை என்பது நாம் அனைவரும் கவலைப்பட வேண்டியது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்
ஹார்வர்டு இருக்கைக்காக கருணாஸ் நிதியுதவி

ஹார்வர்டு இருக்கைக்காக கருணாஸ் நிதியுதவி

Cine News, Cinema
ஹார்வர்டு இருக்கைக்காக கருணாஸ் நிதியுதவி அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கையை உருவாக்க நமது நிதி பங்களிப்பை செய்ய உறுதியேற்போம்! முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் சே. கருணாஸ் அறிக்கை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி நம் செம்மொழியான தாய்மொழி தமிழ். புவிப்பந்தில் ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்குவதோடு மட்டுமன்றி முதன்மையும் பெறுகிறது. ஆகவே, உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களை ஈர்க்க முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் குறிப்பிட்ட அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களாக உள்ளன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு
மூன்று மாதம் போராடி சென்ஸார் வாங்கினேன் “உறுதிகொள்” இயக்குனர் அய்யனார்..!

மூன்று மாதம் போராடி சென்ஸார் வாங்கினேன் “உறுதிகொள்” இயக்குனர் அய்யனார்..!

Cine News, Cinema
மூன்று மாதம் போராடி சென்ஸார் வாங்கினேன் "உறுதிகொள்" இயக்குனர் அய்யனார்..! APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள உறுதிகொள் திரைப்படம் அக்டோபர் 6 அன்று திரைக்கு வரவிருந்தது, GST பிரச்சனையால் புதிய படம் வெளியிடக்  கூடாது என்ற முடிவால் வெளிவரவில்லை. நவம்பர் 3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம்  என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று திரைக்கு வருகிறது. சிறிய பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவது மிகப்பெரிய சவாலாக இன்றைக்கு இருக்கிறது. படத்தோட தலைப்பை "எதிர்கொள்" என்றுதான் பதிவு செய்தோம். எங்களுக்கும் டைட்டில் ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் குடுத்தாங்க பப்ளிசிட்டி செய்து வரும்போது அதே தலைப்பை இன்னும் இரண்டு பேர் பதிவு செஞ்சிருக்கிறதா சொன்னாங்க, சரி நம்ம இவங்ககிட்ட போட்டி போட முடியாதுன்னு தலைப்பை "உறுதிகொள்"னு மாத்தி பதிவு செய்தோம். ஒரு வழியா படத்தை முடிச்சி
பிரபல ஹிந்தி நடிகைக்கு: ஹன்சிகா, குஷ்பு கடும் கண்டனம்!

பிரபல ஹிந்தி நடிகைக்கு: ஹன்சிகா, குஷ்பு கடும் கண்டனம்!

Cine News, Cinema
பிரபல ஹிந்தி நடிகைக்கு: ஹன்சிகா, குஷ்பு கடும் கண்டனம்! சர்ச்சை இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லை. ஆனால் ஹிந்தியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தென்னிந்தியத் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் பிக் பாஸ் 11 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அதில் இதுவரை வெளிவராத ஒரு பகுதியின் காணொளி, சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஹிந்தி நடிகை ஹினா கான், தென்னிந்திய நடிகைகளை விமரிசனம் செய்து பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஹினா கான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியதாவது: தெற்கில், மிகக் குண்டாக இருக்கும் கதாநாயகிகளையே விரும்புகிறார்கள். இதனால்தான் நான் இரு தென்னிந்தியப் படங்களை நிராகரித்தேன். அவர்களுக்குச் சேலை அணிந்து குண்டாகக் காட்சியளிக்கும் கதாநாயகி தேவை. நிறைய சம்பளம் அளிப்பார்கள். நான் நிராகரித்த இரு படங்களில் ஒன்றை மட்டும் ஏன் வே