Cine News

கலாபிரபு எழுதி, இயக்கி, கௌதம் கார்த்திக் நடிப்பில் பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்!

கலாபிரபு எழுதி, இயக்கி, கௌதம் கார்த்திக் நடிப்பில் பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்!

Cine News, Cinema, Trailers, Videos
கலாபிரபு எழுதி, இயக்கி, கௌதம் கார்த்திக் நடிப்பில் பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்! கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் இந்திரஜித் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக ஏராளமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு, பிஸியான வலம் வரும் நடிகராக இருக்கிறார். அடல்ட் காமெடியான ஹர ஹர மஹாதேவகி படத்தின் வெற்றிக்கு பிறகு, இந்திரஜித் படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அஷ்ரிதா ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சோனாரிகா பதோரியா, சுதன்சு பாண்டே, பிரஹாப் போத்தன், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கலாபிரபு எழுதி, இயக்கியுள்ளார். இதை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். https://www.youtube.com/watch?
சூரியா தயாரிப்பில் கார்த்தி – பண்டிராஜ் இணையும் புதிய படம்

சூரியா தயாரிப்பில் கார்த்தி – பண்டிராஜ் இணையும் புதிய படம்

Cine News, Cinema
சூரியா தயாரிப்பில் கார்த்தி - (பசங்க) பண்டிராஜ் இணையும் புதிய படம் நடிகர் சூர்யா வழங்கும் 2D என்டர்டெயின்மென்ட் PRODUCTION NO: 5 கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பமானது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பை சூர்யா தாயார் லட்சு​​மி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து நாள் சென்னையில் நடைபெறும். இதையடுத்து தென்காசியில் 40 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெறுகிறது. விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா,இசையமைப்பாளர் D.இமான்,2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண்
‘டாவு’ முழு நீள காமெடி படம்: இயக்குனர் ராம்பாலா

‘டாவு’ முழு நீள காமெடி படம்: இயக்குனர் ராம்பாலா

Cine News, Cinema
'டாவு' முழு நீள காமெடி படம்: இயக்குனர் ராம்பாலா சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். 'தில்லுக்கு துட்டு' படத்தில் மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் ராம்பாலா, எல்லா தரப்பான மக்களும் கொண்டாடக்கூடிய காமெடியை தருவதில் வல்லுநர். அவர் தற்பொழுது நடிகர் 'கயல்' சந்திரனுடன் இணைந்து 'டாவு' என்ற முழு நீள காமெடி படமொன்றை தொடங்கியுள்ளார். '' இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போட்டுள்ளார். அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் P S அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து 'டாவு' படத்தை சிறப்பாகவுள்ளது. இந்த கதைக்கு 'டாவ
இயக்குனர் பா ரஞ்சித் துவக்கி வைத்த “நானும் ஒரு குழந்தை” புகைப்படக்கண்காட்சி

இயக்குனர் பா ரஞ்சித் துவக்கி வைத்த “நானும் ஒரு குழந்தை” புகைப்படக்கண்காட்சி

Cine News, Cinema, Events, Gallery
இயக்குனர் பா ரஞ்சித் துவக்கி வைத்த "நானும் ஒரு குழந்தை" புகைப்படக்கண்காட்சி புகைப்படகண்காட்சியை துவக்கி வைத்து பேசிய இயக்குனர் பா. ரஞ்சித் .... "நானும் ஒரு குழந்தைதான்" என்கிற இந்த தலைப்பே ஒரு நம்மை ஒரு கேள்விக்கு உட்படுத்துகிறது. வழக்கமான புகைப்படக்கண்காட்சியைப்போல் அல்லாமல் புகைப்படக்கலைஞர் பழனிக்குமார் மலமள்ளும் தொழிலாளர்களின் வலியை சொல்லும் புகைப்படத்தொகுப்பை பார்வைக்கு வைத்திருந்தது புதுமையாக இருந்தது . புகைப்படங்கள் மூலமாக இந்த சமூகத்தில் இருக்கும் ஒரு மக்களின் வாழ்க்கையின் வலிகளை பல கேள்விகளாக நம் முன்னே வைக்கிறார் . கண் முன்னே நடக்கும் அவலத்தை தனது புகைப்படகலை மூலமாக காட்சிபடுத்தியிருப்பது பொழுது போக்குக்காக அல்லாமல் இந்த சாதிய சமூகத்தின் தற்போதைய உண்மையின் நிலையை காட்டுகிறது. மலமள்ளும் தொழிலாளர்களின் அன்றாட பயணங்கள், அவர்கள் உண்ணும் கடைகளில் மீந்துபோகும் உணவு, அவர்களுக்
தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் – வைரமுத்து பரபரப்பு பேட்டி

தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் – வைரமுத்து பரபரப்பு பேட்டி

Cine News, Cinema, Interview
தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் - வைரமுத்து பரபரப்பு பேட்டி "நெஞ்சில் துணிவிருந்தால்" இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டு இருக்கின்றன அல்லது தோல்வியை தொட்டது இல்லை அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படைப்பான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் வெளிவருகிறது. இந்த படைப்பு சமூகத்திற்க்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக இருக்கும். தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும். இந்த மையத்தை வைத்து இந்த படைப்பு இயங்குகிறது. அரசியல், கலை, சமூகம், அரசாங்கம், கல்வி, நீதி, மருத்துவம் எல்லா துறைகளிலும் தகுதிமிக்கவர்கள் தகுதி மிக்க இடத்தை அடைய வேண்
குரு உச்சத்துல இருக்காரு இசைவெளியீட்டு விழா

குரு உச்சத்துல இருக்காரு இசைவெளியீட்டு விழா

Cine News, Cinema
குரு உச்சத்துல இருக்காரு இசைவெளியீட்டு விழா அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குரு உச்சத்துல இருக்காரு'. குரு ஜீவா கதா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா கதா நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரசாத்லேப்பில் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் வருகை தந்திருந்தனர். இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள
அறம் படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள்: இயக்குனர் கோபி நயினார் வருத்தம்

அறம் படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள்: இயக்குனர் கோபி நயினார் வருத்தம்

Cine News, Cinema, Interview
அறம் படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள்: இயக்குனர் கோபி நயினார் வருத்தம் KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கோபி. நடிகர் நாகேஷ் கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்ற
”மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்” – கமல் அறிவிப்பு

”மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்” – கமல் அறிவிப்பு

Cine News, Cinema, India, News, Tamilnadu
''மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்” - கமல் அறிவிப்பு ‘மக்கள் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறேன்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நற்பணி மன்ற செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. “நான் வெளியிட இருப்பது செயலி மட்டுமல்ல, அது ஒரு டிஜிட்டல் அரங்கம். உண்மைகளை மட்டுமே எப்போதும் எல்லோராலும் பேச முடியாததாக இருக்கிறது. தவறான ஆட்களிடம் தானத்தைக் கொடுப்பது கூட தவறுதான். நல்லது செய்தாலும், பண்பு அறிந்து ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் என் கனவு. தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதடைந்துள்ளதாகக்