Cine News

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 65 வது படம் “நெற்றிக்கண்”!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 65 வது படம் “நெற்றிக்கண்”!

Cine News, Cinema, Interview
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 65 வது படம் “நெற்றிக்கண்”! தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப்படங்களாக தந்துவரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தன் 65 வது படத்தில் மிகவும் வித்தியாசமான கதையம்சத்துடன் கலக்க வருகிறார். “நெற்றிக்கண” எனும் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை 15.9.2019 அன்று படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு மிக எளிமையாக நடைபெற்றது. புதுமை இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை தனது Rowdy Pictures சார்பில் முதல் படமாக தயாரிக்கிறார். சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிபெற்று கவனம் ஈர்த்த “அவள்” படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்குகிறார். Actress Nayanthara’s 65th film 'Netrikann' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட வெற்றிப்படமான “நெற்றிக்கண்” படத்தலைப்பு இப்படத்திற்கு கிடைத்ததில் மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது. Rowdy Picture
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் ‘படைப்பு எண் : 4’ – முழு வீச்சில் படப்பிடிப்பு

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் ‘படைப்பு எண் : 4’ – முழு வீச்சில் படப்பிடிப்பு

Cine News, Cinema, Interview
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் 'படைப்பு எண் : 4' - முழு வீச்சில் படப்பிடிப்பு 'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் நான்காவது படம் பல்வேறு விருதுகளைப் பெற்ற நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 4', இன்று இனிதே நீலகிரியில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இந்த மர்மம்-திகில்-திரில்லர் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பை கவனிக்க
உண்மை இல்லா அறிவு திருட்டு, போலியான நபர் மீது மானநஷ்ட வழக்கு..! பட்டுக்கோட்டை பிரபாகர் சவால்…!

உண்மை இல்லா அறிவு திருட்டு, போலியான நபர் மீது மானநஷ்ட வழக்கு..! பட்டுக்கோட்டை பிரபாகர் சவால்…!

Cine News, Cinema, Event Videos, Interview, Videos
உண்மை இல்லா அறிவு திருட்டு! போலியான நபர் மீது மானநஷ்ட வழக்கு..!! பட்டுக்கோட்டை பிரபாகர் சவால்...!!! காப்பான் படக் கதைத் திருட்டு புகார் தொடர்பான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர், பெரிய பட்ஜெட் படங்கள் மீது மட்டுமே, கதைத் திருட்டு புகார்கள் எழுவதாகவும், இதன் பின்னணியை யார் வேண்டுமானாலும் எளிதில் அறிந்து கொள்ள முடியும் எனவும் சூசகமாகப் பேசினார். இதுவரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருவதாகவும், தனது கதைகளில் ஏதாவது ஒன்றை காப்பி என்று நிரூபித்தால், எழுதுவதை நிறுத்த தயார் என்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் அப்போது தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=1CiDsA36sIo
ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்

ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள்

Cine News, Cinema, Interview
ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் நடிகர் சூர்யா வேண்டுகோள் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’, செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு  வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் சூர்யா அளித்த பேட்டி: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 3-வது தடவையாக காப்பான் படத்தில் நடித்துள்ளேன். விவசாயம், அரசியலை பின்னணியாக வைத்து தயாராகி உள்ளது. பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜியை மையப்படுத்திய படம். நான் கமாண்டோ கதாபாத்திரத்தில் வருகிறேன். நமது கமாண்டோ படை வீரர்களின் உழைப்பை படத்தில் பார்க்கலாம். டில்லியில் 2 ஆயிரம் ஏக்கரில் உள்ள என்.எஸ்.ஜி. தலைமை அலுவலகத்தில் சிறப்பு அனுமதி வாங்கி 3 நாட்கள் அங
நிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான ‘சூப்பர் டூப்பர்’ படத்தின்  ஜில்ஜில் ராணி பாடல்!

நிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான ‘சூப்பர் டூப்பர்’ படத்தின்  ஜில்ஜில் ராணி பாடல்!

Cine News, Cinema, Interview, News
நிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான 'சூப்பர்  டூப்பர்' படத்தின்  ஜில்ஜில் ராணி பாடல்! இணையவெளியில்  பதிவேற்றிய சில நிமிடங்களில் லட்சங்களைத் தொட்டிருக்கிறது 'சூப்பர் டூப்பர்' படத்தின் ' ஜில் ஜில் ராணி ' என்கிற பாடல். துருவா , இந்துஜா நடிப்பில் ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'சூப்பர் டூப்பர்'. முழுநீள கமர்சியல் பேக்கேஜ் ஆக உருவாகியிருக்கிறது இப்படம் . வணிகப் பரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப்படத்தில் இடம்பெறும் ஜில் ஜில் ராணி என்ற பாடலை இணைய வெளியில் உலவ விட்ட சில நிமிடங்களில் லட்சத்தைத் தாண்டி இரண்டாவது லட்சம்  அடுத்தடுத்த லட்சம் என்று எகிறுகிறது. https://youtu.be/8gTpGsg4dbk சினிமா என்பது கலாபூர்வ வடிவம் என்பது ஒரு பக்கம் . சினிமா என்பது கொண்டாட்ட வடிவம் என்பது இன்னொரு பக்கம் .கவலைகள் போக்கும் கொண்டாட்டமே சினிமா என்கிற வ
மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன் – ‘காதல் அம்பு’  இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு

மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன் – ‘காதல் அம்பு’  இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு

Cine News, Cinema, Interview
மக்களுக்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் நான் ஆதரிப்பேன் - ‘காதல் அம்பு’  இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி பேச்சு காதல் அம்பு படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகம்.மற்றும் அனைவரின் முயற்சியில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்திருக்கிறோம் என்றார். ஜாக்குவார் தங்கம் பேசும்போது, வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் என்ற கூற்றுக்கேற்ப சினிமாவிற்கு வரும் அனைவரையும் ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இயக்குநர் பேரரசு விரைவில் விஜய்யுடன் ஒரு படத்தை இயக்கப் போகிறார். நடிகர் ஆரியின் சமூக சேவையைப் பாராட்டுகிறேன். மேலும், மதுபானம் குடிப்பது போல படம் எடுக்க வேண்டாம் என்று இயக்குநர் பிரவீனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இப்பட