எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018”

எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018”

சென்னை ,07 மார்ச் : எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018” மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற்றது. விழாவினை “அர்ஜூன் ரெட்டி” திரைப்பட கதாநாயகரான விஜய் தேவரகொண்டா தொடங்கி வைத்தார். விழா முனைவர் தி.பொ. கணேசன் அரங்கில் நடைப்பெற்றது. விழாவின் முதல் நாளில் 6000 மாணவர்களுக்கு மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் விழாவில் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் சந்திப் சன்ஷெட்டியும் , பதிவாளருமான பேராசிரியர். என். சேதுராமன் அவர்களும், மாணவர் நலன் மற்றும் வளாக வாழ்வு துறையின் இயக்குநருமான முனைவர் சி.பி. ராம்சந்தானி அவர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் வேந்தர் பேசுகையில் ’இங்கு அமர்ந்து இருக்கும் அனைத்து மாணவர்களும் தத்தம் துறையில் அல்லது விழாவின் சிறப்பு விருந்தினரான திரு. விஜய் தேவரகொண்டாவை போல சிறந்த நடிகர்களாக எதிர்காலத்தில் விளங்குவார்கள் என்று வாழ்த்தினார். மேலும் அவர், மிலான் என்பது மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திக்கொள்ளவும் அதற்கான சான்றுகளையும் பெற்றுக்கொள்ள உதவும் என்று கூறினார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா மாணவர்களிடையே உரையாடும் போது ,இது தான் எனது முதல் அனுபவம் இது போன்ற கலை விழாவில் கலந்துகொள்வது மற்றும் மாணவர்களின் வரவேற்பையும் பற்றி புகழ்ந்தார். அவரது உரையை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

தொடக்க விழாவை தொடர்ந்து ஆஸ்கார் வெற்றி படமான “தி ஷேப் ஆப் வாட்டர் “ என்ற படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் மாணவர்களால் பெரிதும் வரவேற்க்கப்பட்டது.

இவ்விழாவில் 800 கல்லூரிகளுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பாக்கபடுகிறது. இந்த 4 நாள் கலை விழாவில் 160க்கும் மேற்ப்பட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விழாவில் 40 நாடுகளிலிருந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் 20 லட்சம் வழங்கபட உள்ளது.

மிலன் 2018 என்பது மாணவர்கள் இடையே கலாச்சார கலை நிகழ்ச்சிகளை கொண்டு சேர்ப்பது மட்டும் இல்லாமல் ,சமுதாய அக்கரை கொண்டு, கல்லூரி நிர்வாகத்துடன் இனைந்து “பட்டர்பலைஸ்” என்ற நிகழ்வை அரசு பள்ளி மாணவர்களிடையே நிகழ்த்தபட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்காக பல நகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறைவாக மாணவர்களுக்கு உணவும், புத்தகங்களும், எழுது பொருட்களும் வழங்கப்பட்டது.

மிலனின் முதல் நாள் வெற்றியை தொடர்ந்து , 70000 மாணவர்கள் இதில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்று பரிசு பெறுவார்கள் என்றும் இவ் ஐந்து நாள் விழாவும் வரலாற்று பக்கங்களில் இடம் பெரும் வகையில் சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

ALSO READ:

‘Arjun Reddy’ fever sets fire at SRM Milan 2018

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *