மெர்லின் சினிமா விமர்சனம்

மெர்லின் சினிமா விமர்சனம்

ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிப்பில் வ.கீரா இயக்கியிருக்கும் படம் மெர்லின்.

இதில் விஷ்ணுப்பிரியன், அஸ்வினி, சிறப்பு தோற்றத்தில் அட்டக்கத்தி தினேஷ், தங்கர்பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ஆடுகளம் முருகதாஸ், லொள்ளு சபா ஜீவா, சிங்கம் புலி, ரிசா, நான் மகான் அல்ல ராமச்சந்திரன், கயல் தேவராஜ், ஆதவன், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீர சந்தானம், வைசாலி, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மெர்லின்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-முத்துக்குமரன், படத்தொகுப்பு-சாமுவேல், கலை-ந.கருப்பையா, இசை-கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள்-யுகபாரதி, சாவி, கு.கார்த்திக், வ.கீரா, பாடகர்கள்-மரணகானா விஜி, சைந்தவி, பிரியங்கா, கணேஷ் ராகவேந்திரா, குரு, முருகதாஸ், நடனம்-சங்கர், சண்டை-ஃபயர் கார்த்தி, இணை தயாரிப்பு-ஜெ.பாலாஜி, மக்கள் தொடர்பு-ஆர்.குமரேசன்.

உதவி இயக்குனராக இருக்கும் விஷ்ணுப்பிரியன் பல தயாரிப்பாளர்களிடம் கதைகள் சொல்லி வாய்ப்பு தேடுகிறார். தயாரிப்பாளர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் பேய்க்கதை சொல்ல, அதை நிராகரித்து விட்டு வேறொரு கதை தயார் செய்து கொண்டு வருமாறு தயாரிப்பாளர் கூற ஒன் லைன் கதை சொல்லி ஒகே வாங்குகிறார் விஷ்ணுப்ரியன். ஒரே அறையில் பல நண்பர்களுடன் விஷ்ணுப்ரியன் இருப்பதால் அரட்டை பேச்சுக்களால் அமைதியாக அந்த ஒன் லைன் கதையை டெவலப் செய்ய முடியாமல் தவிக்கிறார். நண்பர்களை அமைதிப்படுத்த பேய் கதையை உருவாக்கி அவர்களை பயமுறுத்தி வைக்கிறார். இதனால் தடங்கலின்றி விஷ்ணுப்ரியனும் தன் கதையை எழுதி முடிக்கிறார். ஆனால் தன் நண்பர்களுக்கு சொன்ன பேய் கதை நிஜத்தில் அவரை பயமுறுத்த மன உளைச்சலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரை குணப்படுத்த நினைக்கும் தாயார் சொந்த ஊரில் இருக்கும் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார். அங்கே விஷ்ணுப்ரியன் குணமடைந்தாரா? எதனால் பயந்தார்? இதிலிருந்து மீண்டு இயக்குனரானாரா? என்பதே திகில் கலந்த சஸ்பென்ஸ் நிறைந்த மீதிக்கதை.

விஷ்ணுப்ரியன் உதவி இயக்குனராக கதை சொல்லி பயமுறுத்தும் இடத்திலும், மனநலம் பாதிக்கப்பட்டவராக சிறப்பான நடிப்பில் மனதில் நிற்கிறார்.
அஸ்வினியின் முக்கிய பங்களிப்போடு அட்டக்கத்தி தினேஷ் கதை கேட்கும் ஹீரோவாகவே சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

தங்கர்பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ஆடுகளம் முருகதாஸ், லொள்ளு சபா ஜீவா, சிங்கம் புலி, ரிசா, நான் மகான் அல்ல ராமச்சந்திரன், கயல் தேவராஜ், ஆதவன், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீர சந்தானம், வைசாலி, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் பங்களிப்பு மிகப் பொருத்தம்.

ஒரே அறையில் நடைபெறும் போது அதை வித்தியாசமான கோணங்களில் கொடுக்க முயற்சி செய்தும், முதல் சீனில் பேயின் பயமுறுத்தும் காட்சியும், இறுதிக்காட்சியில் தன் காட்சிக் கோணங்களால் கவனிக்க வைக்கிறார்.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது.
இயக்கம்-வ.கீரா. கற்பனைக் கதைகளை உருவாக்கும் உதவி இயக்குனரின் கசப்பான காதல் அனுபவங்கள் எப்படி அவரின் மனநிலையை மாற்றி இல்லாத ஒன்றை இருப்பது போல் உருவாக்கம் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை பேய் கலந்து திரைக்கதையமைத்து வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருக்கிறார் வ.கீரா. சில இடங்களின் தோய்வை நிறைவு செய்திருப்பது பல திருப்புமுனை சம்பவங்களும், க்ளைமேக்ஸ் காதல் காட்சியும் தான்.

மொத்தத்தில் மெர்லின் மறைந்து போன சோகம் கலந்த காதல் அனுபவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *